4 நாட்கள் கடையை திறந்ததால் ஒரே குடும்பத்தில் 20 பேருக்கு கொரோனா இருவர் பலி ! மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் இன்று சோகத்தில்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் அசுர வேகத்தில் பரவிவருகிறது கொரோனா இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சில நாட்கள்
 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் அசுர வேகத்தில் பரவிவருகிறது கொரோனா இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சில நாட்கள் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது . அப்போது கொரோனா பரவல் அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு சென்னையில் அமலுக்கு வந்தது .

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டபோது சென்னை பாண்டி பஜாரில் உள்ள பிரபல துணிக்கடை உரிமையாளர் தனது கடையை 4 நாட்கள் திறந்துள்ளார் . அப்போது கடைக்குவந்த சில வாடிக்கையாளர்கள் மூலம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது . இதனால் அவர் தன் கடையை பூட்டி விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார் .

ஏற்கனவே அவருக்கு தொற்று ஏற்பட்டதால் அவர் மூலம் அவரது மனைவி , 3 மகன்கள் , மருமகள்கள், பேர குழந்தைகள் என அனைவருக்கும் பரவியுள்ளது . நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர்கள் . சென்னை தியாகாயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 75 வயது கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வயது 69 ஆகிய இருவரும் அனுமதிற்க்க பட்டுள்ளனர் மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் .

இந்நிலையில் 69 வயதான உரிமையாளரின் மனைவி நேற்று கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் . 43 வயதான மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார் . 75 வயதானவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் .

கடந்த மாதம் வரை மகிழ்ச்சியான கூட்டு குடும்பமாக வாழ்ந்த அந்த குடும்பம் 4 நாட்கள் கடையை திறந்த்தால் இருவரை இழந்து சோகத்தில் வாடுகிறது . கடையை திறந்தாள் கொரோனா வருமா ? மாஸ்க் போடலைனா கொரோனா வருமா ? கை கால்களை கழுவலைனா கொரோனா வருமா ? என்று கேட்பவர்கள் இனியாவது பாதுகாப்புடன் இருங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் காக்கும் !

Click  இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர்கள் ! ஆவேசமாக பதிவிட்ட ராஜ்கிரண் ! என்ன சொன்னார் தெரியுமா ?

Tags