தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பறியது . சென்னை அணி மீது பல்வேறு
 
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பறியது . சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், அதை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது சிஎஸ்கே.கடந்தஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் தோனியையும், சென்னை அணியையும் இனி அவ்வளவு தான் என விமர்சனங்கள் குவிந்தன.

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்றியதில் இருந்து அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதாகிவிட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடந்தால், அத்துடன் தோனி தன் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.இதனால்  சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விவை ரசிகர்கள் இப்போழுதில்  இருந்தே சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். 

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

இந்நிலையில் தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாகும் வாய்ப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . இவருக்கு 32 வயதாகும் நிலையில் 2012 முதல் சென்னை அணியுடன் உள்ளார் . பேட்டிங் , பவுலிங் , பீல்டிங் என அனைத்திலும் அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் .

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

மேலும் கடினமான சூழ்நிலைகளை கூலாக கையாளும் திறன் பெற்றவர் இதனால் ஜடேஜா அடுத்த கேப்டனுக்கான பட்டியலில் முதல் இடத்தில உள்ளார் . அடுத்ததாகா ரெய்னா உள்ளார் ஆனால் நடக்கவுள்ள மெகா ஏலத்தில் ரெய்னாவை தக்கவைப்பது கடினம் என்பதாலும் . ரெய்னா இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பதாலும் அவர் சென்னை அணியின் கேப்டனாவது கேள்விக்குறியாக உள்ளது .

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

மேலும் டெல்லி அணி போல இளம் வீரரை கேப்டனாக்கவும் சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . அதன்படி இந்த ஆண்டு அற்புதமாக விளையாடி 635 ரன்கள் அடித்து சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக்கலாம் என்றும் சென்னை அணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது .

Tags