ஒரே ஆட்டத்தில் 4 முறை கைமாறிய ஆரஞ்சு கேப் ! சென்னை Vs பஞ்சாப் ஆட்டத்தில் சுவாரஸ்யம் !

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக இன்று வியாழக்கிழமை நடந்த ஆட்டத்திலும் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமாகத் தோற்றுப்போனது.

முதலில் பந்தடித்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் டு பிளஸ்ஸியை (76 ஓட்டங்கள்) தவிர வேறு எவரும் பொறுப்புடன்  விளையாடவில்லை. இதனால், 20 ஓவர் முடிவில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

கட்டாய வெற்றியை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்கவாட் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார் அப்போது இந்த தொடரில் மொத்தம் 533 ரன்களை எடுத்திருந்த ருத்ராஜ் ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடம் பெற்றார் .

ஆனால் சிறுது நேரத்தில் 76 ரன்கள் அடித்த பாப் டு பிளேஸிஸ் . 546 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றார் . முதல் இன்னிக்ஸ் முடிந்ததும் அவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது .

ஆனால் அதன் பின் பேட்டிங் ஆடிய கேஎல் ராகுல் மிக சிறப்பாக விளையாடி 98 ரன்கள் அடித்ததன் மூலம் இந்த தொடரில் 626 ரன்கள் அடித்து மீண்டும் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார் . ஒரே ஆட்டத்தில் மூன்று முறை மாறியது இதுவே முதல் முறை .

பஞ்சாப் அணி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் . ஆரஞ்சு கேப்பை கைபற்றிம் வாய்ப்பு டுப்லெஸிஸ்-546, ருதுராஜ்-533 , தவான்-501 , மேக்ஸ்வெல் – 447, படிக்கல் – 390 , விராட் கோலி – 362 ஆகியோருக்கு உள்ளது . ஒரேவேளை இனி உள்ள பிளே ஆப் போட்டிகளில் இவர்களில் யாருமே 626 ரன்களை எட்ட முடியவில்லை என்றால் கே எல் ராகுல் ஆரஞ்சு தொப்பியை பெறுவார் .

Click  இளைஞர்களிடம் கோப்பையை கொடுத்து விட்டு வழக்கம் போல ஓரமாக போய் நின்ற தல தோனி!! கோப்பையை வாங்கிய வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.