#CSKvsSRH தோனி அடித்த பினிஷிங் சிக்ஸ் வீடியோ ! CSK vs SRH போட்டி சுருக்கம்
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணியும் மோதியது. ப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா களமிறங்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 2 ரன்களில் ஆட்டமிழக்க, இவரைதொர்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தார். நிதானமாக விளையாடி வந்த விருத்திமான் சாஹா 44 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியில் ஹேசில்வுட் 3, டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்க வழக்கம்போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் என மொத்தம் 45 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய மொயீன் அலி 17 ரன்னில் ரஷித் கான் ஓவரில் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய ரெய்னா வந்த வேகத்தில் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் தோனி 14, அம்பதி ராயுடு 17 ரன்கள் எடுத்து இருந்தனர். புள்ளி பட்டியலில் சென்னை 18 புள்ளிகள் பெற்று முதலித்தில் உள்ளது.
19.3 ஓவர்கள் முடிவில் 133 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது சிஎஸ்கே அணி அப்போது களத்தில் இருந்த கேப்டன் தோனி 2011 உலகக்கோப்பையில் அடித்தது போலவே ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்தார் . அந்த வீடியோ உங்களுக்காக !
DHONI FINISHES OFF IN STYLE
#SRHvCSK #csk pic.twitter.com/FT3dHKtEIU
— Dipti
(@Mahi_esque) September 30, 2021
Dhoni finishes of in style! A magnificent six into the crowd. #Dhoni #CSKvsSRH #Playoffs @ChennaiIPL pic.twitter.com/GjFRC0o48x
— Nagakrishna Mallikharjun (@nagtweets_) September 30, 2021