IndW vs AusW: ‘வரலாற்றுச் சாதனை’ படைத்த ஸ்மிருதி மந்தனா! ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தல்!

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்று பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
 
IndW vs AusW: ‘வரலாற்றுச் சாதனை’ படைத்த ஸ்மிருதி மந்தனா!  ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தல்!

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்று பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  21 ம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள்  போட்டியில் ஆஸ்திரேலிய  அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  அதன் பின் நடைப்பெற்ற 2வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய  அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது. 

மெக்கெய்யில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டி இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 26 போட்டிகளில் தொடர் தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று சாதனை படைத்தது.  இந்த போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்நிலையில் இந்திய ஆஸ்திரேலிய  மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி நேற்று குயின்ஸ்லாந்தில் தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய  முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா நேற்று 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் இன்று சதத்தை அடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

IndW vs AusW: ‘வரலாற்றுச் சாதனை’ படைத்த ஸ்மிருதி மந்தனா!  ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தல்!

இந்தநிலையில் 127 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்மிருதி மந்தனா அவுட்டாகி களத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடிந்த நிலையில் இந்திய அணி 276 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது .

Click  தோனி ரெய்னா இடையே மோதல் ? சிக்கலில் சிஎஸ்கே ! ரெய்னா இந்தியா திரும்பியதன் காரணம் என்ன தெரியுமா ?

Tags