ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமான சேலத்து விவசாயி மகன் தினேஷ் குமார் ஐபிஎஸ் ! அப்படி என்ன செய்தார் அவர்

கடந்த சில வாரங்களுக்கு முன் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு மாபியா கும்பலை பிடிக்க காவல் துறையினர் சென்றனர், அப்போது அங்கு இதற்காகவே காத்திருந்த மாபியா கும்பல் மற்றும்
 
ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமான சேலத்து  விவசாயி மகன் தினேஷ் குமார் ஐபிஎஸ் !  அப்படி என்ன செய்தார் அவர்

கடந்த சில வாரங்களுக்கு முன் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு மாபியா கும்பலை பிடிக்க காவல் துறையினர் சென்றனர், அப்போது அங்கு இதற்காகவே காத்திருந்த மாபியா கும்பல் மற்றும் அதன் தலைவனான விகாஷ் துபே 8 காவல் துறையினரை சுட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றான் .இந்த விகாஷ் துபே கடந்த 30 ஆண்டுகளாக காவல்துறை கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு பல கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான் . துபே மீது பல கொலை வழக்குகள் உள்ள நிலையில் தான் அவனை கைதுசெய்ய சென்ற காவல்துறையினர் 8 பேரை சுட்டுகொன்றுவிட்டு தப்பிச்சென்றான் விகாஷ் துபே .

இதனால் அதிர்ச்சியடைந்த உத்திரபிரதேச அரசு துபேவை பிடிக்க தனிபிடியை அமைத்தது அதற்க்கு தலைமை தாங்கியவர் தான் தமிழரான தினேஷ் குமார் . 33 வயதே ஆகும் தினேஷ் குமார் 23 வயதிலேயே ஐபிஎஸ் தேர்வாகி காவல்துறையில் சேர்ந்தவர் . இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சாதாரண விவசாயியின் மகனாவார் . இவர் விவசாயத்தின் மீதுகொண்ட பற்றால் Bsc Agriculture படித்தார் . ஆனால் குடும்ப சூழல் காரணமாக ஐபிஎஸ் தேர்வெழுதிய இவர் 2009 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று 23 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக மாறினார் . இவர் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளதாலும் மிகவும் துடிப்பான இளைஞர் என்பதாலும் விகாஷ் துபேவை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க . தினேஷ் குமாரை நியமித்தது உத்தரபிரதேச அரசு

இந்நிலையில் தேடுதல் வேட்டை நடத்திய தினேஷ் குமார் தலைமையிலான படை மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் விகாஷ் துபே வை பிடித்தனர் அவனை உத்திரபிரதேசம் கொண்டுவரும்போது காவல்துறையினரின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது அப்போது விகாஷ் துபே அங்கிருந்த காவல்துறையினரின் துப்பாக்கியை பிடிங்கி தப்பிக்க முயன்றபோது அவனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர் . இந்த சம்பவம் இப்போது நாடுமுழுவதும் பேசப்படும் நிலையில் . இந்த அணியை வழிநடத்திய தமிழர் தினேஷ் குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர் .

Click  இந்தியா தலை அசைத்தாள் போதும் ! விமானங்கள் தயாராக உள்ளது ரஷ்யா ! இந்தியாவாங்கப்போகும் விமானங்களின் விலை தெரியுமா ?

Tags