இந்தியா தலை அசைத்தாள் போதும் ! விமானங்கள் தயாராக உள்ளது ரஷ்யா ! இந்தியாவாங்கப்போகும் விமானங்களின் விலை தெரியுமா ?

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் இந்திய விமானப்படையை பலப்படுத்த இந்தியா அணைத்து நடவடிக்கைகளையும் எடுத்துதுள்ளது கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ராஃபேல் ஒப்பந்தம் சரியாக சென்றிருந்தால் 2012-2013 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் .

ஆனால் சில அரசியல் காரணங்ககளால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டில் அது தூசு தட்டப்பட்டு சில சிறப்பு அம்ஸங்களை சேர்ந்து மீண்டும் பிரான்சுடன் ஒப்பந்தமானது . கடந்த மே மாதம் வரவேண்டிய முதல் 4 ரபேல் விமானங்கள் கொரோன வைரஸ்சால் சற்று தாமதமாகியுள்ள நிலையில் இன்னும் 1-2 மாதத்தில் அவை இந்தியா வந்தடையவுள்ளது

இந்திய விமானப்படைக்கு இப்போது மேலும் பல விமானங்கள் தேவை படுவதால் ரஸ்சியாவிடம் இருந்து 33 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது இந்தியா அதன்படி 12 சுகோய் 30 ரக விமானங்களும் , 21 மிக்-29 ரக விமானங்களையும் அவசரகால தேவைக்காக கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

விமானங்கள் தயாராக இருப்பதாகவும் இந்தியா சொன்னதும் அவை ஒப்படைக்கப்படும் என்றும் இன்று ரஷ்யா கூறியுள்ளது . இந்த 33 விமானங்களின் மொத்த மதிப்பு 5000 கோடி ஆகும் . இந்த விமானங்களை வாங்குவதற்கான பணிகளை நேற்றே துவங்கிய நிலையில் இன்னும் ஒருவாரத்தில் அனைத்தும் இறுதிசெய்யப்பட்டு விமானங்கள் வாங்கப்படும் என்று ராணுவம் தரப்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்

இதுபோன்ற செய்திகளை உடனக்குடன் படிக்கச் The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Click  ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினரானது இந்தியா ? எதிர்த்து யாரும் நிக்க முடியவில்லை ! எத்தனை நாடுகள் நமக்கு ஆதரவு தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published.