விட்டால் அணுஆயுத சோதனை செய்வார் போல ? தனி பணம் , தனி வங்கி , நித்யானந்தா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி !

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோவால் பிரபலமாக பேசப்பட்ட சாமியார் நித்யானந்தா பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து அதிலிருந்து தப்பி வந்த நிலையில் . கடந்தாண்டு டிசம்பர்
 
விட்டால் அணுஆயுத சோதனை செய்வார் போல ? தனி பணம் , தனி வங்கி , நித்யானந்தா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி !

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோவால் பிரபலமாக பேசப்பட்ட சாமியார் நித்யானந்தா பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து அதிலிருந்து தப்பி வந்த நிலையில் . கடந்தாண்டு டிசம்பர் மாதம் தான் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்தார் .

ஈக்வடார் நாடு அருகே உள்ள ஒரு தீவை வாங்கிய நித்தியானந்தா அதற்க்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக தானே பிரகடனம் செய்துகொண்டார் . முழுக்க முழுக்க வாடிகன் சிட்டி எனப்படும் சிறு நாட்டை முன்மாதிரியாக வைத்து நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டிற்கு தனி பாஸ்போர்ட் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார் .

கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது பிரச்சாரத்தை மட்டும் செய்துவந்தார் . இந்நிலையில் தான் இன்று கைலாஸா நாட்டுக்கென தனி வங்கியை உருவாகிவிட்டதாகவும் அதற்க்கு “ரிசர்வ் பாங்க் ஆப் கைலாசா” என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் .

மேலும் கைலாசவுக்கென தனி பணம் தயாராக இருப்பதாக கூறிய நித்யானந்தா , உள்நாட்டு உபயோகம் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை என இரண்டிற்கும் தனி தனி பணத்தை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார் .

விட்டால் அணுஆயுத சோதனை செய்வார் போல ? தனி பணம் , தனி வங்கி , நித்யானந்தா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி !

மேலும் கைலாசாவுக்கென தனியாக 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையை வடிவைத்துள்ளதாகவும் அதை வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்போவதாகவும் கூறியுள்ள நித்தியானந்தா . வாடிகன் வங்கியை முன்மாதிரியாக வைத்து கைலாச ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் .

மேலும் இவை அனைத்தும் சட்டப்படியே செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார் . மேலும் வரும் விநாயகர் சதுர்த்தி நாளன்று பல அறிவிப்புகளை வெளியிடப்போவதாகவும் நித்தியானந்தா கூறியுள்ள நிலையில் . இதை கேட்ட பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர் . சிலர் விட்டால் இவர் தான் அணுஆயுத சோதனை செய்யப்போவதாக கூட சொல்வார் என்று நக்கலடித்து வருகின்றனர் .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  வெளிவந்த உண்மை ! மீண்டும் தலைமை ஆசிரியராக மாறிய குணசேகரன் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !

Tags