வெளிவந்த உண்மை ! மீண்டும் தலைமை ஆசிரியராக மாறிய குணசேகரன் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !

கடந்த மாதம் மாரிதாஸ் என்பவர் வெளியிட்ட வீடியோவில் ஊடகங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் , ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழக ஊடகங்களில் ஆதிக்கம் செழுத்துவதாகவும் குற்றம் சாட்டினார் .

இந்த விவகாரத்தில் பெரிதாக அடிபட்டது நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் தான் . அதன் தலைமை ஆசிரியர் குணசேகரன் , ஹாசிப் மொஹம்மது உள்ளிட்டோர் மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டது இது தொடர்பான ஆதாரங்களை மெயில் மூலம் நியூஸ் 18 தமிழ்நாடு நிர்வாகத்திற்கு அனுப்பினார் . இதுபோல பல மெயில்கள் சென்றதால் நடவடிக்கை எடுத்த நியூஸ்18 குழுமம் தலைமை நிர்வாகம் .

ஹாசிப் மொஹம்மது உள்ளிட்ட சிலரை வேலையை விட்டு நீக்கியது . தலைமை ஆசிரியராக இருந்த குணசேகரனின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு அவரது அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது . குணசேகரனின் சுதந்திரம் பறிக்கப்பட்டதால் அவரே தனது வேலையை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் தான் நியூஸ் 18 இல் இருந்து வெளியேறிய குணசேகரன் தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார் . இந்த தகவலை குணசேகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு .

“சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். அளவற்ற ஆதரவை அள்ளி வழங்கிய அனைவரின் கரங்களையும் நெகிழ்ச்சியோடு பற்றிக் கொள்கிறேன். 🙏”

இதை பார்த்த பலரும் நீங்கள் எங்கு சேர வேண்டுமோ அங்கு தான் சென்றுள்ளீர்கள் என்றும் . இனி மோடியையும் , இந்து மதத்தையும் இஷ்டத்திற்கு பேசலாம் யாரும் கேக்க மாட்டார்கள் என்றும் பலரும் கமண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்

நியூஸ் 18 ஊடகத்தில் பதவி குறைகபட்டதால் தான் மீண்டும் தலைமை ஆசிரியராக தான் இருப்பேன் என்று நியூஸ்18 இல் பொறுப்பை இழந்தபோதும் சன் நியூஸில் மீண்டும் தலைமை ஆசிரியராக மாறியுள்ளார்

Click  சற்றுமுன் கருப்பர் கூட்டம் அட்மினுக்கு போன் செய்து தெறிக்கவிட்ட முத்துராமலிங்க தேவரின் வாரிசு வைரலாகும் ஆடியோ !

Leave a Reply

Your email address will not be published.