தினமும் காலை வெறும் வயிற்றில் வாக்கிங் செய்வதின் பயன்கள் தெரியுமா ?

ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ வேண்டுமா??
ஒவ்வொரு மனிதனும் தினமும் காலை நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஏற்படும் முக்கியமான நன்மைகளை பற்றி இதில் அறிந்து கொள்ளலாம்.
உடலிலுள்ள அனைத்து மூட்டுகள் மற்றும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் இதயம் சீராக இயங்கும்.இரத்த ஓட்டம் தலை முதல் கால் வரை சீராக ஓடும்.உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும் மற்றும் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
உடலில் செரிமான சக்தியைத் அதிகரிக்கும்.உடலில் தேவையற்ற கலோரியை எரிக்கும் அதனால் உடல் எடையை பராமரிக்க உதவும்.இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடற்கழிவு வியர்வையாக வெளியேற உடல் சுறுசுறுப்பாகவும் மற்றும் உடல் சுத்தம் அதிகரிக்கும்.
காலை சூரிய உதயத்தில் நடைபயிற்சி மேற்கொண்டால் வைட்டமின் D உடலுக்கு கிடைக்கும் அதனால் தோல் பாதுகாக்கும் மற்றும் உடலில் கால்சியம் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.மாசற்ற பிராண வாயு சுவாசம் கிடைக்கும் இதனால் நுரையீரல் நலம் பெறும்.இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் வாராமல் பேணி பாதுகாக்கும்.