10 வருடத்திற்கு முன் சூர்யாவிடம் உதவிகேட்ட ஏழை மாணவர் ! இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா ? வைரலாக பரவும் புகைப்படம்
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகரும் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா பிரபல நடிகர் சிவகுமாரின் மகனான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் . நடிகர் என்பதை தாண்டி அகரம் என்னும் அறக்கப்பட்டளையை உருவாக்கி அதன்முலம் பலருக்கும் உதவி வருகிறார் .

இந்த அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் செய்தியுள்ளார் சூர்யா . அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சூர்யா அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்ற மாணவர் .

தான் பன்னிரண்டாம் வகுப்பில் 1160 மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் . தனக்கு மருத்துவம் படிக்க ஆசை என்றும் ஆனால் தன்னிடம் அதற்கான வசதி இல்லை என்றும் கூறினார் . அப்போது அந்த மாணவருக்கான படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக சூர்யா அந்த நிகழ்ச்சியில் கூறினார் .
அதோடு நிற்காமல் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த மாணவரை தொடர்புகொண்டு அந்த மாணவருக்கு சென்னை எம்எம்சி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் அந்த மாணவரின் படிப்பு செலவு முழுவதையும் அகரம் அறக்கட்டளை மூலம் தானே செய்துள்ளார் .

நன்கு படித்து முடித்த நந்தகுமார் என்ற அந்த மாணவர் இப்போது அரியலூர் மாவட்டத்தில் மருத்துவராக உள்ளார் . இப்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
இதுபோன்ற பல செய்திகளை பார்க்க மேலே உள்ள Follow
பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும் . மேலும் பல செய்திகளை படிக்க வீடியோவுக்கு கீழே Scroll செய்த பார்க்கவும்