One Plus நிறுவனத்தின் அடுத்த அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
மொபைல் உலகில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமான one plus சென்ற ஆண்டு தனது முதல் Q1 ரக ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மேலும் தனது இரு ஸ்மார்ட் டிவியை அடுத்த
Jun 8, 2020, 14:21 IST
மொபைல் உலகில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமான one plus சென்ற ஆண்டு தனது முதல் Q1 ரக ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மேலும் தனது இரு ஸ்மார்ட் டிவியை அடுத்த மாதம் ஜூலை 2ஆம் தேதியன்று வெளியிடவுள்ளதாக ஒன் பிளஸ் நிறுவனத்தில் தலைவரான Pete Lau தனது ட்விட்டர் பதிவில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள Q1 ரக ஸ்மார்ட் டிவி 55 இன்ச் அளவும் 4k தொழில்நுட்பம் மற்றும் டால்பி சவுண்ட் சிஸ்டம் கொண்டதாகவும் மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வசதியும் கொண்டதாகவும் இருக்கிறது. இதன் ஆரம்ப விலை 69,000 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூலை 2ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் டிவியை பற்றி எந்த அம்சங்களும் குறிப்பிடாத நிலையில் அதன் விலை மற்றும் சிறப்பம்சம்ங்கள் என்னவாக இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியள்ளது.