விஷாலின் ‘சக்ரா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!! டிரைலரே இத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆகிறதா.?
நடிகர் விஷால் நடித்து இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கிய ’சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது தற்போது ஊரடங்கு நேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக
Jun 24, 2020, 21:10 IST

நடிகர் விஷால் நடித்து இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கிய ’சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது தற்போது ஊரடங்கு நேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது அறிந்ததே. இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் டிரைலர் டீஸர் கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை வெளியாகி ரசிகர்களை வரவேற்பை பெற்றதோடு, டிரைலருக்கு நல்ல எதிர்பார்ப்பும் கிடைத்தது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வரும் சனிக்கிழமை ஜூன் 27ஆம் தேதி இந்த படத்தின் நான்கு மொழி டிரைலர் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.