தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மா(ன்)ஸ்டர் ஆன வரலாறு

தளபதி விஜய்யின் ” மா(ன்)ஸ்டர் ” வரலாறு. தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பெருமை உண்டு. நடிக்க தெரிந்தவன் நடிகன் என்பார்கள். தோற்றத்தில் அழகாக இருப்பவர்கள் எல்லாம்
 
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மா(ன்)ஸ்டர் ஆன வரலாறு

தளபதி விஜய்யின் ” மா(ன்)ஸ்டர் ” வரலாறு.

தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பெருமை உண்டு. நடிக்க தெரிந்தவன் நடிகன் என்பார்கள். தோற்றத்தில் அழகாக இருப்பவர்கள் எல்லாம் ஹீரோவாகிவிடலாம் என்பது சிலருக்கு மட்டுமே பொருந்தும்.

ஹீரோவுக்கான’ இலட்சணத்தோடு இருந்து ஜெயித்தவர்கள் இங்கு குறைவு. நிறம், தோற்றம் , உயரம் என எவற்றிலும் சராசரியை விடக் குறைந்தவர்களே சாதனை படைத்து இருக்கிறார்கள்..
அதனால் தான் டி.ஆர், ராமராஜன், விஜயகாந்த், ரஜினிகாந்த் தற்கால தனுஷ் வரையிலும் பலர் நிலைத்து வென்றனர்.

‘இந்த நடிகர் கதையை சரியாகத் தேர்ந்தெடுப்பார். படத்துக்கு நம்பி போகலாம்’ என்று தான் இப்போதும் சில நடிகர்கள் மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். அது சரியாக நடந்துவிட்டால் அவர்களை தூக்கி உயரத்தில் வைத்து விடுவார்கள்.

ஆரம்பகாலத்தில் விஜய் நடிப்பில் அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஒரளவு மட்டுமே ரசிக்கப்படும் வகையில் அமைந்தவை. அவையெல்லாம் மகனுக்காக அப்பா செய்த கடமை. அதைக் கடந்து தன்னை நடிகனாக நிரூப்பிக்க விஜய் தேர்ந்தெடுத்த படங்களும், இயக்குனர்களும் தான் இன்றைய அவரது வளர்ச்சிக்கு அடித்தளம். படத்தின் கிளைமாக்ஸ் பற்றிக் கவலைப்படாமல் அதில் தலையிடாமல் அவர் நடித்துத் தந்த படங்கள் அனைத்தும் வெற்றி.

கதாநாயகனுக்குரிய இலட்சணங்கள் அற்ற உடல்வாகும், முக அமைப்பும் தான் விஜய்க்கு, இதனை அவர் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் ஒரு வெகுஜன இதழ் கூட நேரடியாகக் குறிப்பிட்டிருந்தது. கொடுத்த ஆடையை அணிந்து கொண்டு, ஒப்பனைக் கலைஞர்களின் இஷ்டத்துக்கு தன்னுடைய முகத்தை ஒப்படைத்துவிட்டு, ஆடச்சொன்னால் ஆடி, கொடுத்த வசனங்களை அப்படியே பேசி வந்தவர் என்றும் அவர் மீது விமர்சனம் உண்டு.

பின்னர் தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கிக் கொண்டதெல்லாம் அவர் நடிக்கத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் கழித்து தான். ஒரு தேர்ந்த நடிகர், தான் எந்தக் கோணத்தில் காட்டப்பட்டால் வசீகரமாக இருப்போமென்று தெரிந்து வைத்திருப்பார். விஜய்யின் முகத்தை எல்லாக் கோணத்திலும் காட்டிவிட முடியாது. குறிப்பிட்ட சில கோணங்கள், பாவனைகளை மட்டுமே சிறப்பாக காட்டக்கூடிய முகம் அவருடையது.

இதை அறிந்த பின்னர் தான் அவர் தன்னை கச்சிதமாக வெளிக்காட்டத் தொடங்கினார். இது அவருக்கு கூடுதல் பலமாக இருந்தது. தன்னை விஜய் போல் நினைத்துக் கொண்ட பல ரசிகர்களை அவர் பெற்றிருந்ததன் காரணமும் அவரின் இந்த பக்கத்து வீட்டு பையன் தோற்றம் தான்.

வணிகரீதியான படங்கள் வெற்றி பெறுவது என்பது திரைப்பட வர்த்தகத்துக்கு ஆரோக்கியமான ஒன்றாகும் அதற்கு காரணம் நடிகர் விஜய்யும் தான். இதே சமயம் தமிழ் சினிமா இப்பொழுதும் மீண்டு எழ முடியாத கதாநாயகனை சுற்றிய கத்தி படங்களில் சிக்கிக்கொள்ள விஜய் தவிர்க்க முடியாத காரணமாக இருக்கிறார் என்பது அவர் மேல் இருக்கும் வருத்தம்.

நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ப்ளஸ் அவரது உடலை அவர் வைத்திருக்கும் விதம் இவர் கல்லூரி மாணவனாக திரையில் தோன்றினால் கூட பார்க்க முடிவதற்கு காரணம். இதற்கு அவரின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது.

ஒரே மாதிரி கமர்ஷியல் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புது விதமாக முயற்சி செய்யலாம் என்று நினைத்து அதற்கான முயற்சிகளை சிறிய அளவில் எடுத்திருக்கிறார் விஜய். ஆனால் அவை தோல்வியை தான் தந்தன.

காரணம் அவர் எடுத்த முடிவு மட்டுமே அல்ல. விஜய்யின் பலம் எது என்று அறியாத அவரின் ஆசையை மட்டுமே நிறைவு செய்ய நினைத்த இயக்குனர்களும் தன்னுடைய பலம் இது மட்டும் தான் என்று விஜய் அவர்களும் நினைத்ததும் தான்.

இருந்தும் விஜய் அதிகம் தோல்விப் படங்களை கொடுக்காத தமிழ் சினிமாவின் தளபதியாக வலம் வருகிறார். அதற்கு காரணம் வெறும் கமர்ஷியல் ஹீரோ என்ற நிலையில் இருந்து Minimum Guarantee மாஸ் ஹீரோவாக தன்னை உயர்த்திக்கொண்டார்.


ஆம் விஜய் ஆரம்பகாலத்தின் சறுக்கல் பின்னர் தொடர் வெற்றிகள் சமநிலை கிட்டத்தட்ட 2007 முதல் 2012 வரை தளபதி விஜய் நடித்துக்கொண்டே இருந்தாலும் பெரும் வரவேற்பை பெறாத படங்கள் பல அக்காலத்தில் வெளிவந்தன. பின்னர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் துப்பாக்கி என்ற பிரம்மாண்ட வெற்றிப்படம் 100 கோடியை தாண்டிய வசூல் விஜய்யின் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது அதன் பின்னர் விஜய்க்கு சிறப்பாக அமைந்ததும் கமர்சியல் மாஸ் எளிமண்ட் கொண்ட ஜனரஞ்சகமான படங்கள் மட்டும் தான். இங்கும் புது முயற்சிகள் சில தோல்வி பெற்றுள்ளன.

இப்பொழுது இளையதளபதி விஜய் தன்னை தளபதி விஜய் என்று மாற்றியுள்ளார். அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய் தான் என்று அனைவரும் பேசிக்கொண்டு இருப்பது தான்.

இந்த ” தளபதி ” விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Tags