மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரே நாளில் அமைந்த பிறந்தநாள்.!!

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர். தமிழக இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது.
 

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர்.

தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது.

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் சுருக்கமாக எம்.எஸ் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்து, 7 வயதிலே திருவனந்தபுரம் தெருக்களில் போராடி, ஏகபட்ட அவமானங்களை சந்தித்து, நாடக கம்பெனி ஆபீஸ் பையனாக வாழ்க்கை தொடங்கி, இசைகற்று பின் சக்கரவர்த்தியாக முடிந்துவிட்ட வரலாறு அவர்.

கவியரசர் கண்ணதாசனுக்கும், இவருக்கும் இருந்த நட்பு உலகறிந்தது. அவர் வானம் என்றால் இவர் மேகம். அவர் கடல் என்றால் இவர் வெண்மணல் கரை. அவர் தென்றல் என்றால் இவர் மெல்லிய குளிர்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்பதை விட, அந்த புருஷோத்தமன் கை புல்லாங்குழலே என அவரினை சொல்வதில் மிகைபடுத்தல் ஏதுமில்லை.

அவதாரங்கள் ஒரு காலமும் தனித்து வராது, சில துணையோடுதான் வரும். ராமன் லட்சுமணன், கண்ணன் பலராமன் என அவதாரங்களுக்கு பலம் சேர்க்க துணை அவதாரங்களும் வரும். அப்படி கண்ணதாசனுக்கு வந்தவர் விஸ்வநாதன்.

அவர் ராகங்களை கல்லாக்கி அடித்தளம் அமைத்து கொடுக்க அதில் தங்க தமிழால் ஜொலிக்கும் கோபுரங்களை கட்டினார் கண்ணதாசன்.

தமிழ் இசையில் எக்காலமும் விஸ்வநாதனுக்கு அழியா இடம் உண்டு இன்று அவருக்கும் பிறந்தநாள் கண்ணதாசனுக்கு பிறந்தநாள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரே நாளில் அமைந்த பிறந்தநாள்.!!

“ராகங்கள் 16 உருவான வரலாறு
நான்பாடும் போது அறிவாயம்மா..” என்பது அவருக்கு எக்காலமும் பொருந்தும் வரி.

Click  தொ ப் புள் குழி அழகை காட்டி சூடான புகைப்படத்தை வெளியிட்ட தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை..!!

Tags