தளபதி 65 ( துப்பாக்கி 2 ) தடையா ? சன் பிச்சர்ஸ் புறக்கணிப்பு ! முழு விவரம்

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம் மாஸ்டர் ! கைதி என்னும் மிக பெரிய வெற்றி படத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை
 
தளபதி 65 ( துப்பாக்கி 2 ) தடையா ? சன் பிச்சர்ஸ் புறக்கணிப்பு ! முழு விவரம்

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம் மாஸ்டர் ! கைதி என்னும் மிக பெரிய வெற்றி படத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது . மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா பிரச்னை காரணமாக இன்னும் அந்த படம் வெளியாகவில்லை

டீசர் , ட்ரைலர் என எதுவும் வெளியாகாத நிலையில் மாஸ்ட்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியவில்லை . கொரோனா ஊரடங்கும் நீடித்துக்கொண்டே செல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது , ஒருவேளை நிலைமை சீரடைந்தாலும் அடுத்த 3 மாதங்களுக்கு திரையரங்கிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை . அதன்பிறகு திறந்தாலும் கொண்டாட்டங்கள் இருக்காது .

இந்நிலையில் தான் தளபதி விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவது உறுதியானது . ஏற்கனவே துப்பாக்கி , கத்தி , சர்க்கார் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமான துப்பாக்கி 2 வாக இருக்கலாம் என்றும் செய்திகள் கசித்தனர் .

தளபதி 65 ( துப்பாக்கி 2 ) தடையா ? சன் பிச்சர்ஸ் புறக்கணிப்பு ! முழு விவரம்

இதற்க்கு வலுசேர்க்கும் விதமாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தை தயாரிப்பதாக கூறியிருந்தது இந்நிலையில் தான் மாஸ்டர் படம் இன்னும் இழுபறியில் உள்ளதால் , தளபதி 65 படத்திற்கு சம்பளத்தை குறைத்துக்கொள்ளவும் , படத்தின் பட்ஜெட்டை குறைக்கவும் ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய்யிடம் சன் பிச்சர்ஸ் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது . ஆனால் அதை மறுத்த விஜய் தளபதி 65 தயாரிப்பை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுக்க சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

ஆனால் இந்த குற்றச்சாட்டை புறக்கணித்துள்ள சன் பிச்சர்ஸ் . தளபதி 65 படத்தை தாங்கள் தான் தயாரிக்கப்போவதாக கூறியுள்ளது . கொரோன ஓய்ந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்ட்டர் படம் வெளியான பின்புதான் இதுபற்றிய முழு தகவல் தெரியவரும்

Click  க வ ர்ச் சிக்கு நோ சொன்ன சாய் பல்லவியா இது..!! ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!!

Tags