குட்டையான டவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகை ஜனனி..!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த
2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக் குமார்.இந்த சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி. இவரின் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

ஜனனி 1992 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.இவர் தனது கல்லூரி படிப்பை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிரபலமான மாடல்களில் இவரும் ஒருவராக உள்ளார்.இவர் வி ஜே வாக தனியார் துறையில் பணியாற்றி உள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு நண்பேண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் சமுத்திரகனியின்
ஏமாளி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை,ஆயுத எழுத்து, காற்றின் மொழி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தீடீரென செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.இவர்
அவ்வப்போது சமூகப் பிரச்சினைகளும் குரல் கொடுத்து வருகிறார்.இவர் தனது மாடலிங் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் தற்போது குட்டி டவுசர் அணிந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குழந்தைகள் உடையை அணியலாமா..? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

