பாக்ஸர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அருண் விஜய்.!!
நடிகர் அருண் விஜய் தமிழ்சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை சரியாக பயன்படுத்தி வருகிறார். அருண் விஜய்க்கு அஜித்தின் என்னை அறிந்தால் படம் மிரட்டலான ரீஎன்ட்ரி கொடுத்தது மறுபடியும் கோலிவுட்டில் அவரை மீண்டெழச் செய்தது. பின்னர் பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிய ஆரம்பித்தன. தடம் மேலும் ஒரு சிறப்பு வெற்றி தந்தது அவருக்கு பெற்று தந்தது. கடைசியாக மாஃபியா படத்தில் மிரட்டல் அதிகாரியாக நடித்திருந்தார்.

தற்போது, விவேக் என்பவர் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் படம் பாக்ஸர். எட்செட்ரா என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். அவரே இந்த படத்தின் வில்லனாகவும் நடிக்கிறார் என்பதை அருண் விஜய் உறுதிபடுத்தியிருந்தார். ரித்திகா சிங் இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது அருண் விஜய் பாக்ஸர் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். “ உங்களில் பலர் பாக்ஸர் படம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்களைப் போலவே நானும் ஆவலாக உள்ளேன். இந்தப் படத்துக்காக கடினமாக உழைத்து வருகிறேன், ஆனால் படத்தின் வேலைகள் முழுமை அடையவில்லை. இந்த படம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டு செய்யவேண்டிய இடம். படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் வரும்வரை காத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.