மலேசியா வாசுதேவன் BIOPIC படத்தில் நடிகர் விஜய் சேதுபதி !!

மலேசியாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவை தன் குரலால் லயிக்க வைத்தவர் மலேசியா வாசுதேவன். இவரின் தமிழ் உச்சரிப்பு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தது என்று செல்லலாம்.

பல்வேறு பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக வலம் வந்தவர் வாசுதேவன்.

அவரது சூப்பர் ஹிட் பாடல்களை பட்டியலிட்டால் ஒரு மிகப்பெரிய லிஸ்ட் வரும். இவர் ஏறக்குறைய 8 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இப்படி ஒரு ஜாம்பவான் வாழ்க்கை வரலாற்று படத்தை தற்போது உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

மறைந்த மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் யுகேந்திரன் அவர்கள் இந்த படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

பாடகர் மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்திற்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை விஜய் சேதுபதி ஏற்றுக்கொள்வாரா என்பதை சிறுது காலம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் யுகேந்திரன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியின் வசம் ஏற்கனவே பல படங்கள் உள்ளன. இவர் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமொன்றிலும் நடிக்க உள்ளதாக சென்ற வருடமே அறிவிப்பு வெளியானது.

இப்பபடத்தினை தெலுங்கு நடிகர் ராணா தான் தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் முரளிதரன் பயோபிக் படம் இன்னும் தயாராகவில்லை.

மலேசியா வாசுதேவன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த காலம் தொடங்கி சினிமாவில் அறிமுகமாகி உச்சம் தொட்டது வரை அனைத்தும் இடம்பெறும் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

பாடகர் மலேசியா வாசுதேவன் பாடி லாங்குவேஜ்ஜில் விஜய் சேதுபதியால் சிறப்பாக நடிக்க முடியும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்…

Click  வருத்தம் தெரிவித்த அஜித்: ஒகே சொன்ன சந்தோஷ் நாரயணன்! நடந்தது இது தான்.!!

Leave a Reply

Your email address will not be published.