90 டிஸ் பிரபல நடிகை மோகினி யா இது..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மோகினி. இவர் 1991 ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் 1978 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் மகாலட்சுமி.

இவர் ஈரமான ரோஜாவே படத்தை தொடர்ந்து புதிய மன்னர்கள் , நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட நடித்துள்ளார்.

மோகினி 1996 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் காதல் பகடை, 2006 ஆம் ஆண்டு ராஜராஜேஸ்வரி , பொதிகை தொலைக்காட்சியில், ஒரு பெண்ணின் கதை போன்ற தமிழ் தொடர்களிலும் மற்றும் ஜெய்ஹிந்த் தொலைக்காட்சியில் “கதனார் கடம்பத்து கதனார்” என்ற மலையாள தொடரிலும் நடித்துள்ளார்.
ராஜராஜேஸ்வரி சீரியலுக்கு பின்னர் இவரை எந்த சினிமாவிலும் சீரியலில் கூட காண முடியவில்லை.

இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வர இவர் 1999 ஆம் ஆண்டு பரத் என்ற பிஸ்னஸ்மேனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் இவர் ஜஅமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் மற்றும் அனிருத் என்ற மகன்கள் உள்ளனர்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Click  மஞ்சள் நீராட்டு விழாவில் அழகிய நடனம் ! குடும்பமே சேர்ந்து போட்ட செம்ம டான்ஸ் !!!

Leave a Reply

Your email address will not be published.