பிக்பாஸ் அர்ச்சனாவின் மகளா இது..!!தாவணி பாவாடையில் சாரா வெளியிட்ட புகைப்படங்கள் !!
பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அர்ச்சனா.இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காமெடி டயம்” என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தார். இவர் 1982 ஆம் ஆண்டு வடஇந்திய குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பின் தமிழகத்தில் இடம் பெயர்ந்தார்.

அடுத்தடுத்து “இளமை புதுமை”, “கலக்கப்போவது யாரு” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இவர் 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார்.இவருக்கு சாரா என்ற மகள் உள்ளார். பின்னர் சிறிது காலம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரிகம” என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
தற்போது ஒரு சில தமிழ் சினிமா திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.ஒரு சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அர்ச்சனா வெளியே வந்ததும் அவரின் மகள் சாரா அம்மா வந்துவிட்டார்கள் என மகிழ்ச்சியில் கொண்டாடினார்.இவரை போலவே இவரின் மகளும் மக்களிடையே மிகவும் பிரபலம். பிரபல ஜீ தொலைக்காட்சியில் மகள் மற்றும் அம்மா இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார்கள்.இந்நிலையில் சாரா தாவணி பாவாடையில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

