அச்சு அசல் மறைந்த நடிகை சித்ரா போலவே இருக்கும் இளம் பெண்..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் வருபவர் தான் நடிகை சித்ரா.இவர் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை பற்றி போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சித்ராவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த பெண்ணின் பெயர் கீர்த்தனா தினகர். கீர்த்தனா தினகர் வேறு யாரும் இல்லை மறைந்த பழம்பெரும் நடிகை சௌதாவின் பேத்தி.சொளதா நகைச்சுவை நடிகர் வடிவேலு கூட பல படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தற்போது தொகுப்பாளிராக பணியாற்றி வருகிறார் என்று தெரிகிறது.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ராவை போல் இருக்கும் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கீர்த்தனா தனது பதிவில் சித்ரா போலவே போட்டோ ஷூட் நடத்திய காரணத்தையும் கூறியிருக்கிறார்

கீர்த்தனா தினகர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பது பல வருடங்களாக நான் எங்கு சென்றாலும் என்னை நீங்கள் முல்லை அல்லது சித்ரா நடிகையை போல இருக்குறீங்க என்பார்கள்.அந்த கருத்துக்கள் அப்போது எனக்கு சந்தோஷத்தை கொடுக்காது.ஏனெனில் நான் தனியாக தோன்ற வேண்டும் என்று நினைப்பவள். ஆனால் இப்போது நீங்கள் சித்ரா மாதிரி இருக்குறீங்க என்று சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு காரணம் என்னால் ஒருவரை சந்தோஷப்படுத்த முடிகிறது என்று கூறியிருந்தார்.


புகைப்படம்
