அரசியலில் நுழையும் விஜய் ! டெல்லியிலிருந்து கசிந்த ரகசிய தகவல் ! கையில் 2 திட்டம் ! முழு விவரம் !

தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு ! தமிழக அரசியல் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள் பலர் சினிமாவிலிருந்து வந்தவர்கள் ! ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று 1996 ஆம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றுவரை அவர் அரசியலுக்கு வரவில்லை .

அவருடைய சக நடிகர்கள் கமல் மற்றும் விஜயகாந்த் அரசியலுக்குள் நுழைந்து தங்களுக்கென தனி கட்சியை துவங்கி தேர்தலை சந்தித்து வரும் நிலையில் . இப்போது தளபதி விஜய்யும் அரசியலுக்குள் நுழைய முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .

இளம் வயதினர் பலரையும் ரசிகரங்களாக வைத்துள்ள விஜய் அரசியலுக்கு வந்தால் இளம் ஆன் , பெண்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் திட்டமிட்டுள்ளார் . இதனால் டெல்லியில் இருந்து ஒரு வழக்கறிஞர்ரை சென்னைக்கு வரவழைத்து பேசியுள்ளார் .

அந்த வழக்கறிஞர் புதிதாக கட்சி துவங்குவது . அந்த கட்சியை முறையாக பதிவு செய்வது போன்ற சேவைகளை செய்துதரும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் . பல நடிகர்களுக்கும் இவர் தான் கட்சி துவங்கி அதற்கான சட்டரீதியான உதவிகளை செய்துள்ளார் .

ஆரம்பத்தில் ரஜினி கூட இந்த நபரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளார் . தெலுங்கு திரை உலகில் சில நடிகர்களுக்கும் இந்த வழக்கறிஞர் தான் உதவி வருவதாக கூறப்படுகிறது . இந்த கொரோனா காலத்தில் அவரை டெல்லியில் இருந்து சென்னை வரவழைத்து அவருடன் எஸ்ஏ சந்திரசேகர் தனியாக பேசியுள்ளார் .

இது இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது . 2021 தேர்தல் நேரத்தில் அதிரடியாக அரசியலுக்குள் நுழையும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது . இது ஒத்துவரவில்லை என்றால் பாரம்பரியமிக்க தேசிய கட்சியில் உயர்மட்ட பதவியில் அமர்ந்து தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என்ற மாற்று திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது . மொத்தத்தில் கூடிய விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  லோ ஆங்கிளில் கவர்ச்சியின் எல்லைக்கு போன நடிகை சதா..!! Zoom செய்து பார்க்கும் இளசுகள்!!

Leave a Reply

Your email address will not be published.