கொந்தளித்த தமிழர்கள் ! அதிரடி நடவடிக்கை எடுத்த சொமேட்டோ! பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன் ! கோவையில்

வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம் என சொமேட்டோ தெரிவித்துள்ளது.

பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமேட்டோ நிறுவனம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. காரணம், தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து உள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக வரவில்லை. இதனால், விகாஷ் சோமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சாட் பாக்சில் புகார் தெரிவிக்க, அவருடன் பேசிய நபர் ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என சோமேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு விகாஷ் தமிழ்நாட்டில் சேவை வழங்கும்போது தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த சோமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று பதில் அளித்துள்ளார். இதனால், சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக ட்விட்டரில் #Reject_Zomato என்ற hastag மூலம் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘சொமேட்டோ’ நிர்வாகம் வருத்தம் தெரிவித்து தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வணக்கம் தமிழ்நாடு

எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

Click  சீனாவுக்கு ஆப்படிக்கும் இந்தியா ! உலகிற்க்கே 5G சேவையவை தரப்போகிறோம் ! இன்று அம்பானி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத் தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்) மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.