இந்த தீபாவளிக்கு வெளியாகும் 5 பெரிய தமிழ் படங்கள் ! எந்த எந்த திரைப்படங்கள் தெரியுமா?

தீபாவளியில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள்.

தமிழகத்தில் கொரானா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதித்த நிலையில்,  திரைப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கிறது.

அந்தவகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ”அண்ணாத்த” திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் ”எனிமி”,  சிம்புவின் ”மாநாடு” திரைப்படம், அருண்விஜயின் வாடீல் ஆகிய படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ளன. இவர்களின் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், சூர்யாவின் ஜெய்பீம் படம் OTT தளத்தில் வெளியாகிறது.இந்நிலையில், 50 சதவீத இருக்கைகள் மட்டுமே கொண்ட தியேட்டர்களில் 100 சதவீதமாக உயர்த்த திரைப்பட சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைககளுக்கு அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தியேட்டர் அதிபர்கள் கூறுகின்றனர்.

Click  கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை சாய் பல்லவி..!! ரசிகர்களிடையே வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.