இளைஞர்களிடம் கோப்பையை கொடுத்து விட்டு வழக்கம் போல ஓரமாக போய் நின்ற தல தோனி!! கோப்பையை வாங்கிய வீடியோ !

ஐபிஎல் 2021 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றுள்ளது.  குவாலிபையர் 2 போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணியுடன் பைனல் போட்டியில் இன்று ஆடியது கொல்கத்தா அணி.  டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.  இரு அணிகளும் முந்தைய போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் களம் இறங்கியது.  தோனி இன்று தனது 300வது டி20 போட்டியில் கேப்டனாக களம் இறங்கினார்.  

சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிய ருதுராஜ் சுனில் நரைன் பந்தில் 32 ரன்னில் அவுட்டானர். அடுத்த விக்கெட்டிற்கு களமிறங்கிய உத்தப்பா தொடக்கம் முதலே அதிரடியாகவே ஆடினார். இதனால் 10 ஓவர்களில் சென்னை அணி 80 ரன்களை கடந்தது. பாப் டுப்ளிசிஸ் பெர்குசன் பந்தில் சிக்ஸர் அடித்து நடப்பு தொடரில் தனது 6வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

11.3 ஓவர்களில் சென்னை 100 ரன்களை கடந்தது. உத்தப்பா- பாப் டுப்ளிசிஸ் ஜோடி 26 பந்தில் 50 ரன்களை குவித்தது. சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிய உத்தப்பா 15 பந்தில் 3 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்களை எடுத்தது.

கடைசி 5 ஓவர்கள் மட்டும் இருந்ததால் பாப் டுப்ளிசிஸ் -மொயின் ஜோடி அதிரடியில் இறங்கினார். ஷிவம் மாவி கடைசி ஓவரை சிறப்பாக வீசி, கடைசி பந்தில் பாப் டுப்ளிசிசையும் அவுட்டாக்கினார். பாப் டுப்ளிசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 86 ரன்களை குவித்தார். சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெர்குசன் 4 ஓவர்கள் வீசி 56 ரன்களை வாரி வழங்கினார்.

193 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணி
கொல்கத்தாவிற்காக ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கி இருந்தனர். இருவரும் 91 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 11-வது ஓவரின் நான்காவது பந்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார் வெங்கடேஷ். 

Click  இர்பான் பதான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த செருப்பு தைக்கும் தொழிலாளி ! சென்னையில் செருப்பு தைப்பவருக்கும் இர்பான் பதானுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா ?

அதற்கடுத்த 36 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. வெறும் 34 ரன்களை மட்டுமே எடுத்தது. அது அந்த அணியை ஆட்டத்தில் வீழ்ச்சிக்கு தள்ளியுள்ளது. சென்னை அணியின் பவுலர்கள் தாக்கூர் மற்றும் ஜடேஜா வீசிய ஒரே ஓவரில் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 

கொல்கத்தா அணியின் 4-வது வீரராக சுனில் நரைன் இறக்கப்பட்டார். நரைன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சுப்மன் கில்லும் அரைசதம் அடித்த கையோடு தீபக் சஹர் பந்துவீச்சில் அவுட்டாகினர்.

தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். இதனால் போட்டியில் பரபரப்பு கூடும் என்ற நினைத்த கையோடு 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஷகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் ராகுல் திரபாதி 2 ரன்னிலும் கேப்டன் பொறுப்பில் மட்டும் இருந்து வந்த மோர்கன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

இதனால் கொல்கத்தா அணி 125 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே அணி 4-வது முறையாக தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Bravo selfi video with Teammates After winning

Leave a Reply

Your email address will not be published.