சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பாடகி சுசித்ரா ஆவேச பேச்சு

சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் ஆகிய இருவரும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்ததாக கூறி
 
சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பாடகி சுசித்ரா ஆவேச பேச்சு

சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் ஆகிய இருவரும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்ததாக கூறி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு போலிஸார் கடுமையாக தாக்கியதால் இருவருக்கும் அதிகப்படியான ரத்தப்போக்கு போனதன் காரணமாக மரணம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு கடையடைப்பு போராட்டமும் நடந்து வருகிறது. தமிழக அரசு தரப்பில் அவர்கள் இருவரும் உடல்நலக் குறைவால் இறந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாடகி சுசித்ரா அவர்கள் ” தென்னிதியாவில் இது போன்ற சம்பவம் நடந்தால் அது இந்தியா முழுமைக்கும் சென்றடைவதில்லை எனவே நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று பேசத்துவங்கி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதில் அவர்கள் மரணிக்கும் வரை நடந்த சம்பவங்களை தெளிவாக ஆங்கிலத்தில் விவரித்துள்ளார்” இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது..

suchithra video about father and son death in sathankulam

Tags