வேலூரில் கொடூரம் வீடியோ எடுத்து மிரட்டல் இளம் மாணவி தீ வைத்து தற்கொலை ! பதுங்கும் சிறுத்தை குட்டிகள் நடவடிக்கை எடுக்குமா காவல் துறை ?

வேலூரில் 15 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார் . இப்போது
 
வேலூரில் கொடூரம் வீடியோ எடுத்து மிரட்டல் இளம் மாணவி தீ வைத்து தற்கொலை ! பதுங்கும் சிறுத்தை குட்டிகள் நடவடிக்கை எடுக்குமா காவல் துறை ?

வேலூரில் 15 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார் . இப்போது அந்த சிறுமி 90 சதவீத தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

அந்த மாணவியின் இந்த நிலைக்கு காரனமானவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி உதவி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது . மேலும் அந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் காவல் துறையிடம் அளித்த வாக்கு மூலம் பின்வருமாறு

” என் சித்தப்பா செல்போனுக்கு ஒரு போன் வந்தது. போனை நான்தான் எடுத்துப் பேசினேன். அந்த பக்கம் `உன்னையும் உன் சித்தப்பனையும் பழிவாங்குறதுக்காக உனக்கே தெரியாம ஒரு வீடியோ எடுத்திருக்கிறோம். இந்த நம்பர்ல இருக்கிற வாட்ஸ்-அப்புக்கு அனுப்பியிருக்கிறோம். பார்த்திட்டு லைன்ல வர சொன்னாங்க..

வாட்ஸ்-அப்பை பார்த்தபோது, நான் குளிக்கிற வீடியோவை அனுப்பியிருந்தாங்க. அந்த வீடியோவை டெலிட் பண்ணச் சொல்லி அவங்களுக்கு போன் பண்ணேன். என்கிட்ட ஐந்தாயிரம் ரூபாய் கேட்டாங்க. உடனே..

என் சித்திகிட்ட நடந்ததைச் சொன்னேன்.`அவனுங்களுக்கு பணம் தரவேண்டாம். நாம போலீஸ்கிட்ட போவோம்’னு சித்தி சொன்னாங்க. அதுக்குள்ள அவனுங்க திரும்பவும் போன் பண்ணி, ‘வேலூர் கோட்டைக்கு வாடி.. எங்ககூட இருந்துட்டு போ..’னு கூப்பிட்டாங்க. நான் பயந்து மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கிட்டேன்” என்றார்.

இந்த தகவலை இன்னும் எந்த ஊடகமும் வெளியிடாத நிலையில் ஒரு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இயக்கும் ஒரு ஊடகம் மட்டும் தெலுங்கில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது ஆனாலும் இன்னும் தமிழில் வெளியிடவில்லை .

நமது The Public polls இணையதளம் இந்த செய்தியை வெளியிடுகிறது இவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் .

மேலும் இதுபோன்ற பல செய்திகளை மக்க்கின குரலாய் அறிந்துக்கொள்ள The Public Polls நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்.

Tags