லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு அடுத்து சென்னை தான் ! உலகின் டாப் 6 நகரங்களில் 3 இந்தியாவில் ! சிந்திக்கவேண்டிய பதிவு

கொரோனா வைரஸ் உலகளவில் மிக பெரிய தாக்கத்தை உருவாகிவரும் சூழலில் . அது இந்தியாவின் முக்கிய நகரங்களையும் விட்டுவைக்கவில்லை . குறிப்பாக சென்னை , டெல்லி ,
 
லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு அடுத்து சென்னை தான் ! உலகின் டாப் 6 நகரங்களில் 3  இந்தியாவில் ! சிந்திக்கவேண்டிய பதிவு

கொரோனா வைரஸ் உலகளவில் மிக பெரிய தாக்கத்தை உருவாகிவரும் சூழலில் . அது இந்தியாவின் முக்கிய நகரங்களையும் விட்டுவைக்கவில்லை . குறிப்பாக சென்னை , டெல்லி , மும்பை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது . இந்நிலையில் உலகளவில் கொரோன பரவல் அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது .

இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் முக்கிய நகரமான லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளது . இரண்டாம் இடத்தில் சென்னை உள்ளது . ஆம் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று அதிகமாக வருவதால் சென்னை இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது . இந்தியாவிலேயே தொற்று அதிகமுள்ள நகரமாக சென்னை மாறியுள்ள நிலையில் .

உலகளவில் முதல் இடத்தில் லாஸ் ஏஞ்செல்ஸ் இரண்டாம் இடத்தில் சென்னை , மூன்றாம் இடத்தில் சாண்டியாகோ , நான்காம் இடத்தில் டெல்லி , அடுத்ததாக சா பாலோ அதை தொடர்ந்து தானே , மியாமி , பியூனஸ் அயர்ஸ் உள்ளிட்ட நகரங்கள் உள்ளனர் . சென்னையில் சோதனைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதும் தொற்று அதிகமாக தெரிய காரணமாக கூறப்படுகிறது .

Tags