சாத்தான்குளம் தந்தை மகன் உயிரழப்புக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்..

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணத்திற்கு காரணமானவர்ககும், அதற்கு துணை போனவர்களும் விரைவில் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்,
 
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரழப்புக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்..

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணத்திற்கு காரணமானவர்ககும், அதற்கு துணை போனவர்களும் விரைவில் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..

சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த காவலர்களின் ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. ‘இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌’ என கடந்து சென்றிட முடியாது.

போலீசாரால்‌ கொடூரமான இந்த தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌ மற்றும் மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, ‘நலமாக இருப்பதாக’ சான்று அளித்திருக்கிறார்‌. நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்டோ பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, ‘அவசர கதியில்’ சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌.

சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்கவில்லை என்றும் இத்தகைய ‘கடமை மீறல்‌’ செயல்கள்‌, ஒரு குடிமகனின்‌ உரிமையில்‌ ‘அதிகார அமைப்புகள்‌’ காட்டும்‌ அலட்‌சியத்தை வெளிச்சம்‌ போட்டு காட்டுகின்றது. இதனால்‌ இதுபோன்ற ‘துயர மரணங்கள்‌’ ஒரு வகையான ‘திட்டமிடப்பட்ட குற்றமாக’வே (Organised Crime) நடக்கிறது.

இருவரின்‌ மரணமும் ஒருவேளை நிகழாமல்‌ போயிருந்தால்‌, போலீசாரின்‌ இந்தக்‌ கொடூர தாக்குதல்‌ நம்‌ கவனம்‌ பெறாமலேயே போயிருக்கும்‌. பாதிக்கப்பட்டவர்கள்‌ சிறையிலிருந்து வெளியே வந்தாலும்‌, ‘போலீசாரை எதிர்த்தால்‌ என்ன நடக்கும்‌’ என்பதற்கான வாழும்‌ சாட்சியாகிவே அவர்கள் இருப்பார்கள்‌. தங்கள்‌ மரணத்தின்‌ மூலம்‌ தந்தை, மகன்‌ ஆகிய இருவரும் இந்தச்‌ சமூகத்தின்‌ மனசாட்சியை உலுக்கிவிட்டு இருக்கிறார்கள்‌.

இந்த கொடூர மரணத்தின் போது தங்களுடைய கடமையை தவறிய அனைவரும்‌ நீதியின்‌ முன்‌ நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்‌. உயர்‌ நீதிமன்றம்‌ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதால், நீதி கிடைக்கும்‌ என்று ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.

இதேபோல, ‘தவறு செய்கிறவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ தண்டனையில்‌ இருந்து தப்பிக்க முடியாது’ என்ற நம்பிக்கையை அரசாங்கமும்‌, நீதி அமைப்பும் மக்களிடம்‌ உருவாக்கிட வேண்டும்‌. மாறாக, ‘அதிகார அமைப்புகள்‌’ அவநம்பிக்கையை தான் ஏற்படுத்துகின்றன.

இரண்டு உயிர்‌ போவதற்கு காரணமான குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு இதுதான்‌ தண்டனையா?’ என்று எழுந்த விமர்சனத்துக்குப்‌ பிறகுதான் சம்பந்தப்பட்ட காவலர்கள் ‘பணியிடை நீக்கம்‌’ செய்யப்பட்டனர்‌. காவல்துறையில்‌ அர்ப்பணிப்புடன்‌ கடமையை செய்கிற பலரையும் நான் தனிப்பட்ட முறையில்‌ நன்கு அறிவேன்‌.

ஆயினும் ஒட்டுமொத்த நாடும்‌ இயங்க முடியாமல்‌ ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல்‌ மக்களின்‌ நலனுக்காக காவல்துறையினர்‌ பலர் உழைக்கின்றனர்‌. ‘கொரோனா யுத்தத்தில்‌’ களத்தில்‌ முன்‌ வரிசையில்‌ நிற்கிற காவல்துறையினருக்கு நான் தலைவணங்குகிறேன்‌. அதேநேரம்‌, அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும்‌ காவல்துறையினருக்கு எதிராக எனது கடும்‌ கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

அதிகார அத்துமீறல்‌ வன்முறைகளால் ஒருபோதும்‌ மக்களின்‌ மனதினை வென்றிட முடியாது. அன்பும்‌, அக்கறையும்‌ கொண்டு தன் கடமையை செய்கிற நல்ல காவல்துறையினரே மக்களின்‌ மனதில்‌ நிலைத்து நிற்கிறார்கள்‌.

ஒரே நேரத்தில்‌ இருவர் இறந்துவிட்டு இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடுகின்ற ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் குடும்பத்தினரின்‌ துயரத்தில்‌ நானும்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறேன்‌.

இனியும் இது போன்று ‘அதிகார வன்முறைகள்‌’ காவல்துறையில்‌ இனியும் நிகழாமல்‌ தடுக்க தேவையான மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் அரசும்‌, நீதிமன்றமும்‌, பொறுப்புமிக்க காவல்‌ அதிகாரிகளும்‌ ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

குற்றம்‌ இழைத்தவர்களும்‌, அதற்கு துணை போனவர்களும்‌ விரைவாக தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்‌’ என்று பொதுமக்களில்‌ ஒருவனாக நானும்‌ காத்திருக்கிறேன்‌ என்று நடிகர் சூர்யா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags