தோனி ரெய்னா இடையே மோதல் ? சிக்கலில் சிஎஸ்கே ! ரெய்னா இந்தியா திரும்பியதன் காரணம் என்ன தெரியுமா ?

மே மாத இறுதியில் துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் தான் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய
 
தோனி ரெய்னா இடையே மோதல் ? சிக்கலில் சிஎஸ்கே ! ரெய்னா இந்தியா திரும்பியதன் காரணம் என்ன தெரியுமா ?

மே மாத இறுதியில் துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் தான் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளது . இதற்காக அணைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர் .

இந்நிலையில் துபாய் சென்றுள்ள சென்னை அணியின் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது . இது ஒருபுறம் இருக்க இரண்டுநாட்களுக்கு முன் திடீரென துபாயிலிருந்து இந்தியா திரும்பினார் சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா .

அவர் ஏன் இந்தியா திரும்பினார் என்பதற்கு சரியான காரணம் கூறப்படாதா நிலையில் ரெய்னாவின் மாமா மற்றும் மாமாவின் குடும்பத்தினர் ஒரு கொள்ளை கும்பலால் தாக்கப்பட்டனர் அதில் ரெய்னாவின் மாமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவரது குடும்பமும் காயமடைந்துள்ளனர் இதனால் தான் அவர் இந்தியா திரும்பியுள்ளார் என்று செய்திகள் வெளியானது .

இந்நிலையில் நேற்று பேட்டியளித்த சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஒரு நல்ல வாய்ப்பை ரெய்னா தவறவிடுவதாகவும் . இந்த ஐபிஎல் ஆடினால் அவருக்கு 11 கோடி கிடைத்திருக்கும் அதையும் அவர் இழப்பதாகவும் கூறினார் .

மேலும் தனிமையில் இருப்பதால் மனஉளைச்சலில் இருந்த ரெய்னாவின் அறையில் பால்கனி இல்லை அதனால் தோனியின் அறையில் உள்ளதுபோன்ற வசதிகளுடன் பால்கனியுடன் கூடிய அரை வேண்டும் என்று ரெய்னா கேட்டிருந்ததாகவும் கூறினார் . மேலும் இன்னும் ஐபிஎல் துவங்க 20 நாட்கள் உள்ளதால் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் ரெய்னா அணியில் இணையவேண்டும் என்று ஸ்ரீநிவாசன் அந்த பேட்டியில் கூறியுள்ளார் .

இது இப்படி இருக்க கொரோனா பரவல் காரணமாக சென்னையில் பயிற்சி வைக்கவேண்டாம் என்று ரெய்னா தோனியிடம் கூறியதாகவும் ஆனால் தோனி சென்னையில் பயிற்சி வைத்ததாகவும் . இப்போது சென்னை அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்

தான் சொன்னதை கேற்காமல் பயிற்சி வைத்ததால் தான் தொற்று ஏற்ப்பட்டது என்று கூறி தோனியிடம் ரெய்னா வாக்குவாதம் செய்ததாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் ரெய்னா நான் இந்த ஐபிஎல் விளையாடவில்லை என்று கூறிவிட்டு இந்தியா திரும்பியதாகவும் சில ஊடங்கள் செய்திகளை வெளியிட துவங்கியுள்ளனர் .

Click  Who will win today ? Vote your favourite team and support them ! VOTE HEAR
தோனி ரெய்னா இடையே மோதல் ? சிக்கலில் சிஎஸ்கே ! ரெய்னா இந்தியா திரும்பியதன் காரணம் என்ன தெரியுமா ?

இன்னும் ஐபிஎல் போட்டிகள் துவங்க சில நாட்களே உள்ள நிலையில் சென்னை அணியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags