இர்பான் பதான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த செருப்பு தைக்கும் தொழிலாளி ! சென்னையில் செருப்பு தைப்பவருக்கும் இர்பான் பதானுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா ?

சென்னை சேப்பாக்கத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்பவர் பாஸ்கரன் கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்த தொழிலை செய்துவரும் நிலையில் , அவர் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும்
 
இர்பான் பதான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த செருப்பு தைக்கும் தொழிலாளி ! சென்னையில் செருப்பு தைப்பவருக்கும்  இர்பான் பதானுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா ?

சென்னை சேப்பாக்கத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்பவர் பாஸ்கரன் கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்த தொழிலை செய்துவரும் நிலையில் , அவர் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஒரு போட்டியை கூட தவறவிட்டதில்லை அணைத்து போட்டிகளையும் பார்த்து விடுவாராம் . ஐபிஎல் துவக்ககாலத்தில் அவரிடம் ஷூ தைத்த முக்கிய நபர் பாஸ்கரின் திறனை பற்றி சென்னை அணியின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த

பாஸ்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபீசியல் ஷூ சரி செய்து தருபவராக மாறினார் . சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் அருகே பாஸ்கரனுக்கு ஒரு அரை கொடுக்கப்படும் அங்கு அவர் சென்னை வீரார்களின் விளையாட்டு ஷூ களை சரி செய்து அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி தருவார்

மற்ற நாட்களில் வருமானம் குறைவாக இருந்தாலும் ஐபிஎல் காலத்தில் பாஸ்கரனுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் அதைவைத்து தனது குடும்பத்தை நடந்துவந்துள்ளார் , இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறாததால் , ஊரடங்காலும் அவர் வருவாய் இன்றி தவித்து வந்துள்ளார் . இந்நிலையில் இர்பான் பதானுக்கு பாஸ்கரன் நினைவு வந்துள்ளது உடனே ஈஎஸ்பிஎன் ஊடகத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அவர் உதவிகேட்டுள்ளார் .

ஆனால் அந்த நபர் பாஸ்கரனின் தொடர்புகளை பெற்றுத்தர மறுத்துள்ளார் . ஆனால் தனது சொந்த முயற்சியாற் பாஸ்கரனின் தொடர்பு எண்ணை பெற்ற இர்பான் பதான் அவருக்கு 25000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்

இதுபற்றி பாஸ்கரன் கூறியபோது மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது எனக்கு வழக்கமான வருவாய் கிடைக்க துவங்கிவிடும் அப்போது நான் நிச்சயம் அந்த தொகையை திருப்பி தந்துவிடுவேன் என்று கூறியுள்ளார் . உழைத்து சம்பாதிக்கவேண்டும் என்ற பாஸ்கரனின் எண்ணம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது . இர்பான் பதான் 2015 ஆம் ஆண்டு மட்டுமே சென்னை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோன்ற செய்திகளை உடனக்குடன் படிக்கச் The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Tags