ஐபிஎல் பற்றி வெளியான அப்டேட்ட ! உற்சங்கம் ஒருபக்கம் சோகம் ஒரு பக்கம் ! முழு விவரம்

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது ! நவீனகால கிரிக்கெட் இந்திய அணி நீண்டநாட்கள் விளையாடாமல் இருப்பது இப்போது தான்
 
ஐபிஎல் பற்றி வெளியான அப்டேட்ட ! உற்சங்கம் ஒருபக்கம் சோகம் ஒரு பக்கம் ! முழு விவரம்

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது ! நவீனகால கிரிக்கெட் இந்திய அணி நீண்டநாட்கள் விளையாடாமல் இருப்பது இப்போது தான் ! அதுவும் இந்த கொரோன தொற்று காரணமாக எந்த போட்டியும் நடைபெறாமல் தடைபட்டுள்ளது . கடந்த ஏப்ரல் மே மாதத்தில் நடக்கவேண்டிய ஐபிஎல் போட்டிகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த மாத இறுதியில் கூடும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த ஆண்டு இறுதியில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவுள்ள நிலையில் அந்த முடிவுகள் வெளியான பிறகே ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது

இந்தியாவில் இப்போதிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த வாய்ப்பில்லாத சூழலில் . ஐபிஎல் போட்டியை தாங்கள் நடத்த விரும்புவதாக இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பிசிசிஐயிடம் கூறியுள்ளது . இந்த இரு நாடுகளின் சூழலையும் ஆராய்ந்துவரும் பிசிசிஐ . 20 ஓவர் உலகக்கோப்பை நடக்குமா , நடக்காதா என்ற அறிவிப்பு வெளியானதும் ஐபிஎல் பற்றிய முடிவுகளை எடுக்கப்போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது

ஐபிஎல் போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் பிசிசிஐ உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலும் வெளிநாட்டில் . போட்டிகளை குறைத்தாவது நடத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

Tags