நானும் உங்களுடன் வருகிறேன் ! தோனி ஓய்வுபெற்றதை பார்த்ததும் ஓய்வு பெற்ற முக்கிய வீரர் !

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல கோப்பைகளை பெற்றுத்தந்த மஹேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .
 
நானும் உங்களுடன் வருகிறேன் ! தோனி ஓய்வுபெற்றதை பார்த்ததும் ஓய்வு பெற்ற முக்கிய வீரர் !

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல கோப்பைகளை பெற்றுத்தந்த மஹேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்

நானும் உங்களுடன் வருகிறேன் ! தோனி ஓய்வுபெற்றதை பார்த்ததும் ஓய்வு பெற்ற முக்கிய வீரர் !

“உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக்கொள்ளுங்கள் ” என்று ஒரே வார்த்தையில் முடித்துள்ளார் .

கடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியே இந்திய அணிக்காக தோனி விளையாடிய கடைசி போட்டி . திடீரென ஒரே வார்த்தையில் தான் ஓய்வுபெற்றதாக தோனி அறிவித்தது தோனி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . தோனி ஓய்வை அறிவித்த அடுத்த 1 மணிநேரத்தில் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார் . இது தொடர்பாக ரெய்னா வெளியிட்ட அறிவிப்பில்

நானும் உங்களுடன் வருகிறேன் ! தோனி ஓய்வுபெற்றதை பார்த்ததும் ஓய்வு பெற்ற முக்கிய வீரர் !

” தோனி, உங்களுடன் விளையாடுவது அழகானது. என்னுடைய இதயம் முழுவதும் பெருமை நிறைந்திருக்கிறது. உங்களுடைய பயணத்தில் இணைந்து முடிவெடுத்துள்ளேன். நன்றி இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இருவருமே ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்கள் என்று சென்னை அணி நிர்வாகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது .

நானும் உங்களுடன் வருகிறேன் ! தோனி ஓய்வுபெற்றதை பார்த்ததும் ஓய்வு பெற்ற முக்கிய வீரர் !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags