கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த தல தோனி ! இறுதி போட்டிக்கு 9 ஆவது முறையாக சென்ற CSK !

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் 3 முறை வென்று சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ளது. நடப்பு சீசனில் நடந்த லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியையும் சந்தித்துள்ள அந்த அணி பட்டியலில் 2வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
14-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 1 துபையில் நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதல் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். அன்ரிச் நோர்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே டு பிளெஸ்ஸி 1 ரன்னுக்கு போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் பிறகு கூட்டணி சேர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ராபின் உத்தப்பா மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன்னும் குவித்தது.

நீண்ட நேரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராபின் உத்தப்பா 63 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு வந்த ஷர்துல் தாகூர் ரன் எதுவும் எடுக்காமலும், அடுத்ததாக வந்த அம்பத்தி ராயூடு 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்த ருத்துராஜ் கெய்க்வாட்டும் 70 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் போட்டியில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது!

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ருதுராஜ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 18.1ஓவது ஓவரில் ஆவேஷ் கான் பந்துவிச்சில் ஆட்டமிழந்தார். ருதுராஜ் அடித்தது 70 (50) ரன்கள். இதனைத் தொடர்ந்து மகேந்திர தோனி களமிறங்கினார். அந்த ஓவரில் மொயின் ஒலி பவுண்டரி, தோனி ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால், கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. டாம் கரன் வீசிய முதல் பந்தில் மொயின் அலி ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் தோனி பவுண்டரி அடித்தார். இதனால், கடைசி 4 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்திலும் தோனி பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஒயிட் சென்ற நிலையில், 4ஆவது பந்தில் தோனி பவுண்டரி அடித்து சிஎஸ்கேவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
சென்னை அணி பெற்ற திரிளர் வெற்றியின் மூலம் 9 ஆவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது சென்னை அணி ! சென்னை அணியின் வெற்றி வீடியோ
Winning Moment
What a game of cricket that was! #CSK, they are now in Friday’s Final of #VIVOIPL pic.twitter.com/eiDV9Bwjm8
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
dhoni Finishing video
The Lion Back To Track
#CSKvsDC
Never ever underestimate our #Finisher
#Thala #Dhoni finish off in his style and #CSK enters the finalssssss pic.twitter.com/4wHTYl4D7S
— Siva Harsha || S/H
(@SivaHarsha_1) October 10, 2021
Dhoni sixer
Don’t need to prove anything to anyone one .name is enough. #Dhoni pic.twitter.com/hJXRXhBqMM
— ShivNitin (@Shivnitinburi) October 10, 2021