பிராவோ , பொல்லார்ட் அசத்தல் கோப்பையை கைப்பற்றியது ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி ! மூன்றாவது கோப்பை .

கடந்த 2013 ஆம் ஆண்டுமுதல் நடந்துவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று (செப்டம்பர் 10) இறுதிப்போட்டி
 
பிராவோ , பொல்லார்ட் அசத்தல் கோப்பையை கைப்பற்றியது ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி ! மூன்றாவது கோப்பை .

கடந்த 2013 ஆம் ஆண்டுமுதல் நடந்துவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று (செப்டம்பர் 10) இறுதிப்போட்டி நடைபெற்றது . 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாலிவுட் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கானின் “ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ்” அணியும் “செயின்ட் லூசியா சூக்ஸ்”அணியும் மோதினர் .

இந்த ஆண்டு ஒரு தோல்வியை கூட சந்திக்காத கிரண் பொல்லார்ட் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங் செய்த சூக்ஸ் அணி நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் திணறியது அதிகபட்சமாக ஆண்று பிளெட்சர் 39 ரன்கள் அடித்தார் .

பிராவோ , பொல்லார்ட் அசத்தல் கோப்பையை கைப்பற்றியது ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி ! மூன்றாவது கோப்பை .

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அணியின் கேப்டன் பொல்லார்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் . 19.1 ஓவரில் 154 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது சூக்ஸ் அணி . அடுத்ததாக களமிறங்கிய நைட் ரைடர்ஸ் ஆரம்பத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் . லிண்டல் சிம்மன்ஸ் மற்றும் டாரன் பிராவோ நிலைத்து நின்று ஆடினார் .

இறுதியாக 18.1 ஓவரில் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது நைட் ரைடர்ஸ் அணி . அந்த அணி சார்பில் அதிகபட்சமாக லிண்டல் சிம்மன்ஸ் 49 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார் . டாரன் பிராவோ 47 பந்துகளில் 58 ரன்கள் அடித்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

பிராவோ , பொல்லார்ட் அசத்தல் கோப்பையை கைப்பற்றியது ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி ! மூன்றாவது கோப்பை .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் டிவைன் பிராவோ நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது . சிபிஎல் 2020 தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி .

இறுதி போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு ஷாருக் கான் உரிமையாளராக இருப்பதுபோல . இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த “St லூசியா சூக்ஸ்” அணிக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா 4 உரிமையாளர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

பிராவோ , பொல்லார்ட் அசத்தல் கோப்பையை கைப்பற்றியது ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி ! மூன்றாவது கோப்பை .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags