பொள்ளாச்சி , நாகர்கோவிலை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம் ! வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி பல கோடி மோசடி ! மோசடி கும்பல் சிக்கியது எப்படி ?

சமீப காலமாக பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது ! பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் , அடுத்ததாக வெளிவந்தது நாகர்கோவில்
 
பொள்ளாச்சி , நாகர்கோவிலை   தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம் ! வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி பல கோடி மோசடி ! மோசடி கும்பல் சிக்கியது எப்படி ?

சமீப காலமாக பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது ! பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் , அடுத்ததாக வெளிவந்தது நாகர்கோவில் காசி செய்த மோசடிகள் ! பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை காசி விரித்த வலையில் சிக்கியவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது . ஜெர்மனியில் பொறியியல் படிக்கும் மொஹம்மது முஹைதீன் தலைமையில் இயங்கிய அந்த 5 பேர் கொண்ட கும்பல் இன்ஸ்டாகிராமில் பல பெண்களுக்கு காதல் வலை விரித்து ஆ பா ச படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பிரித்துள்ளனர் .

ஒருவேளை ஆ பா ச படம் எடுக்கமுடியவில்லை என்றால் . அந்த பெண்களின் படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பரித்துள்ளனர். இதன்முலம் பல லட்சங்கள் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது .இவர்களால் பாதிக்கப்பட்ட கீழக்கரையை சேர்ந்த ஒரு திருமணமான பெண் எஸ்பி வருண்குமாருக்கு நேரடியாக தொலைபேசிமூலம் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு முஹம்மத் முஹைதீன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஜஸாம் கனி , பார்ட் பைசல் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர் .மற்றவர்களை காவல் துறையினர் தேடிவரும் நிலையில் , இவர்கள் இருவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது

Tags