நீரவ் மோடியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டது – சிறப்பு நீதி மன்றம் அறிவிப்பு

இந்தியாவின் பஞ்சாப் தேசிய வங்கிகளிடமிருந்து ரூ12,000 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனிற்கு தப்பி சென்றுவிட்டார் நீரவ் மோடி. இந்நிலையில் பி.எம்.எல்.ஏ (பணமோசடி தடுப்பு சட்டம்) சிறப்பு
 
நீரவ் மோடியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டது – சிறப்பு நீதி மன்றம் அறிவிப்பு

இந்தியாவின் பஞ்சாப் தேசிய வங்கிகளிடமிருந்து ரூ12,000 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனிற்கு தப்பி சென்றுவிட்டார் நீரவ் மோடி. இந்நிலையில் பி.எம்.எல்.ஏ (பணமோசடி தடுப்பு சட்டம்) சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்களன்று நீரவ் மோடியின் ரூ1400 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆணை புதிதாக உருவாக்கப்பட்ட தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் (FEO) சட்டம், 2018 இன் கீழ், குற்றவாளியின் சொத்தை பறிமுதல் செய்வதற்கான முதல் உத்தரவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரூ1400 கோடி பரிமுதலானது நீரவ் மோடியின் ரூ55 கோடி ரொக்க பணமும், உள்நாட்டு சொத்து ரூ600 கொடியும், வெளிநாட்டு சொத்து ரூ100 கொடியும்,  ரூ100 கோடி மதிப்பிலான கலை பொருட்கள் மற்றும் ரூ490 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் உள்ளடக்கியதாகும். விரைவில் இரண்டாம் கட்ட பறிமுதல் ஆனா பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

Tags