MOTN நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு ! இந்தியாவின் டாப் 5 பிரதமர்கள் யார் தெரியுமா ? மீண்டும் மோடி பிரதமராவாரா ? மக்களின் கருத்து என்ன தெரியுமா ?

MOTN ( Mood Of The Nation ) மூட் ஆப் தி நேஷன் என்ற அமைப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை கருத்துக்கணிப்பை நடத்தும் . தற்போது கொரோனா தொற்று இந்தியா முழுவதும் பரவியுள்ளது , ஒரு பக்கம் ராமர் கோவில் அடிக்கல் நாட்டபடுள்ளது இந்த சமையத்தில் மக்களின் மனநிலையை அறிய MOTN இந்தியா முழுவதும் பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது
கடந்த ஜூலை மாதம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது . அதன்படி இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களிலேயே நரேந்திர மோடி முதலிடம் பிடித்துளார் . 44 சதவீதம் மக்கள் இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் மோடி தான் சிறந்தவர் என்று வாக்களித்துள்ளனர் . 14 சதவீத வாக்குகளை பெற்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் . 12 சதவீத வாக்குகளுடன் இந்திரா காந்தி 3 ஆம் இடமும் 7 சதவீத வாக்குகளுடன் மன்மோகன் சிங்க் 4 ஆம் இடமும் , 5 சதவீத வாக்குகளுடன் லால் பகதூர் சாஸ்திரி 5 ஆம் இடமும் பிடித்துள்ள்ளனர் .

இதேபோல கடந்த ஜனவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடி 34 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார் . தற்போது அது 10 சதவீதம் உயர்ந்துள்ளது . 2016- ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த ஆய்வில் இந்திரா காந்தி 23 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். 18 சதவிகித வாக்குகளுடன் வாஜ்பாய் இரண்டாவது இடத்திலும் 17 சதவிகித வாக்குகளுடன் மோடி மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
இந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அபரிதமாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடியே வருவார் என்று 66 சதவிகித மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிரதமராகும் விஷயத்தில் ராகுல் காந்தி பிரதமராவார் என்று 8 சதவிகித மக்களும் சோனியா காந்தி பிரதமராவார் என்று 5 சதவிகித மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அமித் ஷா பிரதமராவார் என்று 4 சதவிகித மக்கள் நம்புகின்றனர்.
இது கொரோனா காலம் என்பதால் இந்திய சுகாதார துறை மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு 77 சதவீதம் மக்கள் ஆம் நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளனர். 18 சதவீதம் மக்கள் மட்டுமே நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர் .
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும்