பாஜக பக்கம் செல்ல தயாராகும் முக்கிய திமுக MLAகள் 4 பேர் ! கேப்டனின் திட்டத்தை கையில் எடுத்த திமுக !

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் திமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார் , அவரை தொடர்ந்து ஆயிரம் விளக்கு திமுக MLA குக
 
பாஜக பக்கம் செல்ல தயாராகும் முக்கிய திமுக MLAகள் 4 பேர் ! கேப்டனின் திட்டத்தை கையில் எடுத்த திமுக !

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் திமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார் , அவரை தொடர்ந்து ஆயிரம் விளக்கு திமுக MLA குக செல்வம் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார் . திமுகவில் உதயநிதி ஸ்டாலினின் அதிகாரங்கள் அதிகமாக இருப்பதால் கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுவதாக கூறப்படுகிறது .

பாஜக பக்கம் செல்ல தயாராகும் முக்கிய திமுக MLAகள் 4 பேர் ! கேப்டனின் திட்டத்தை கையில் எடுத்த திமுக !

இதனால் அதிருப்தியில் உள்ள சீனியர்கள் பலரையும் தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியில் பாஜக உள்ளது . மேலும் திமுகவிலுள்ள ஜெகத்ரட்சகன் போன்ற ஆன்மீக நம்பிக்கை அதிகமுள்ளவர்களையும் தங்கள் பக்கம் சாய்க்க பாஜக முடிவுசெய்துள்ளது . இலங்கையில் ஆயிரக்கனக்கான கோடிகளை ஜெகத்ரட்சகன் முதலீடு செய்து சிக்கலில் சிக்கியுள்ளார் .

மேலும் பழைய வழக்குகளும் வர தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் பாஜக பக்கம் செல்வதுதான் ஒரே வழி என்று அவர் முடிவுசெய்திருப்பதாக கூறப்படுகிறது . அடுத்ததாக தூத்துகுடி , திருநெல்வேலி , விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த 3முக்கிய MLA களை பாஜக பக்கம் கொண்டுவர பொன் ராதாகிருஷ்ணன் மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது .

பாஜக பக்கம் செல்ல தயாராகும் முக்கிய திமுக MLAகள் 4 பேர் ! கேப்டனின் திட்டத்தை கையில் எடுத்த திமுக !
ஜெகத்ரட்சகன் திமுக MP

இந்த தகவல் திமுக தலைமைக்கு செல்லவே அதிர்ச்சியடைந்த திமுக தலைமை . 2011 இல் தேமுதிக போட்ட திட்டத்தை கையில் எடுத்துள்ளது . 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றிபெற்றது .

ஆனால் அடுத்த 6 மாதத்தில் அதிமுக தேமுதிக இடையே சண்டை மூண்டதால் பல தேமுதிக MLAகள் அதிமுக பக்கம் சென்றனர் . MLA களை தடுக்க கேப்டன் ஒரு திட்டம் வகுத்தார் அதன்படி அதிமுக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் MLA கள் பற்றிய விவரங்களை சேகரித்து . அவர்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்ததுடன் .

பாஜக பக்கம் செல்ல தயாராகும் முக்கிய திமுக MLAகள் 4 பேர் ! கேப்டனின் திட்டத்தை கையில் எடுத்த திமுக !

அப்படி சந்தேகிக்கப்படும் MLA கள் அதிமுகவில் இணையப்போவதாக தேமுதிகவே செய்திகளை கசியவிடும் . அதை வைத்து அந்த MLA களின் கட்சி விசுவாசத்தை சோதனை செய்வர் . அதே பாணியை தான் இப்போது திமுக கையில் எடுத்துள்ளது . திருச்செந்தூர் தொகுதி திமுக MLA அனிதா ராதாகிருஷ்ணன் பாஜக பக்கம் செல்வதாக தகவல் வெளியான நிலையில்

அவர் திமுக தலைமையை சந்தித்து தான் எப்போதும் திமுகவில் தான் இருப்பேன் என்று கூறினார் . அவரின் கட்சி விசுவாசத்தை சோதிக்க அனிதா ராதாகிருஷ்னன் பற்றிய தகவலை வெளியிட்டதே திமுக தான் என்று கூறப்படுகிறது . தேர்தல் நெருங்க நெருங்க பல அதிரடி திருப்பங்கள் நடைபெறலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது

இதுபோன்ற அரசியல் நகர்வுகளை அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags