இந்த ஊரடங்கில் இந்திய மக்கள் அதிகமாக எதை தேடினார்கள் தெரியுமா ? கூகுள் வெளியிட்ட பட்டியல் ! வித்தியாசமானவர்கள் இந்தியர்கள் !

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இன்று வரை ஊரடங்கு
 
இந்த ஊரடங்கில் இந்திய  மக்கள் அதிகமாக எதை தேடினார்கள் தெரியுமா ? கூகுள் வெளியிட்ட பட்டியல் ! வித்தியாசமானவர்கள் இந்தியர்கள் !

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இன்று வரை ஊரடங்கு தொடர்ந்துவரும் நிலையில் . இந்த ஊரடங்கில் இந்திய மக்கள் அதிகமாக எதை கூகுளில் தேடினார்கள் என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது .

அதில் ஊரடங்கின் துவக்கமான ஏப்ரல் மாதத்தில் வீட்டிலேயே பானிபூரி செய்வது எப்படி என்பதையே அதிகமாக மக்கள் தேடியுள்ளனர் . சாதாரணமாக சாலைகளில் 10,20 ரூபாய்க்கு கிடைக்கும் பானிபூரி ஊரடங்கால் கிடைக்காததால் அதை வீட்டிலேயே செய்ய மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்

இரண்டாவதாக 5 நிமிடத்தில் வீட்டிலேயே ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்பதை மக்கள் அதிகமாக தேடியுள்ளனர் . மூன்றாவது இடத்தில் நமது பாரம்பரிய மருத்துவம் பிடித்துள்ளது , பாட்டி வைத்திய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதை 3 வது அதிகமாக மக்கள் தேடியுள்ளனர்

நான்காம் இடத்தை வைட்டமின் C உணவுகள் யாவை என்பதும் , ஐந்தாம் இடத்தில் சிறு கதைகளும் பிடித்துள்ளது . ஏப்ரல் மாதத்தில் இப்படி என்றால் மே மாதத்தில் லாக்டவுன் 4.0 என்ற வார்த்தை அதிகமாக தேடப்பட்டள்ளது அதை அடுத்து டல்கோண காபி , மேங்கோ ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகள் பிடித்துள்ளது , மூன்றாம் இடத்தில் உடட்பயிற்சிகளை வீட்டிலேயே செய்வது எப்படி என்பது பிடித்துள்ளது , நான்காம் இடத்தில் பொழுதுபோக்கான சினிமாவும் , ஐந்தாம் இடத்தில் வானிலை பற்றிய தகவல்களையும் தேடியுள்ளனர்

உலகிலேயே இந்தியாவில் தான் உணவுகள் இந்த பட்டியலை ஆக்கிரமித்துள்ளது என்பது இந்த பட்டியலின் சிறப்பம்சம்

Tags