உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு அட்டவணை!

திங்கட்கிழமை :- காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்களோ அவ்வளவு உடம்பு நன்றாக இருக்கும். இதனால் உடல் சூடு தணியும். மலம் இளக்கமாக போகும். தேகம் சம நிலை அடையும்.பின்னர் ஏழு மணிக்கு அருகம்புல் சாறு ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். மூன்று மணிக்கு சுக்கு, கொத்தமல்லி கலந்து காபி குடிக்கலாம். பதினோறு மணிக்கு பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் அல்லது பேரிச்சம்பழம் ஐம்பது கிராம் அல்லது திராட்சை நூறு கிராம் அல்லது வாழைப்பழம் இரண்டு சாப்பிடலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், ஒரு கப் ஏதாவது கீரை, இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், இரண்டு டம்ளர் மோர், இரண்டு பேரிச்சம் பழம் மட்டும்.மாலை நான்கு மணிக்கு கொண்டைக் கடலை அல்லது மொச்சை வேகவைத்தது ஒரு கப், அத்துடன் ஒரு டம்ளர் சுக்கு காபி. இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி. ஒன்று அல்லது இரண்டு வாழை அல்லது பேரிச்சம் பழம், சிறிதளவு தேங்காய்த் துண்டு.
செவ்வாய்க்கிழமை :- வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எலுமிச்சம் பழம், இஞ்சி, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். ஒன்பது மணிக்கு கேழ்வரகுப் புட்டு, வாழைப் பழம் அல்லது வேறு ஏதாவது ஒரு பழம், பதினோறு மணிக்கு கேரட்சாறு ஒரு டம்ளர் மட்டும். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், வாழைத் தண்டு, முருங்கைக் கீரை ஒரு கப், மிளகு ரசம் மற்றும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம்.மாலை நான்கு மணிக்கு எள், ஏலக்காய், வெல்லம் கலந்த எள் உருண்டை இரண்டு மற்றும் ஒரு கப் காய்கறி சூப். இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப்சாதம், வெந்தயக் குழம்பு அல்லது சீரகக் குழம்பு, இரவு படுக்கப் போகும் முன்பு பப்பாளி அல்லது மாம்பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம்.
புதன் கிழமை :- வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு ஒரு டம்ளர் வேப்பிலை சாறு, மிளகு, சீரகம் கலந்து சாறு குடிக்கலாம். ஒன்பது மணிக்கு பைன் ஆப்பிள் சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், மிளகு ரசம், அகத்திக் கீரை, சுண்டைக்காய் கூட்டு, மாலை நான்கு மணிக்கு ஒரு டம்ளர் பாகற்காய் சூப் குடிக்கலாம். இரவு ஏழு மணிக்கு எலுமிச்சம் சாதம் ஒன்று அல்லது இரண்டு கப், பீட்ரூட் பொறியல், பேரிச்சம் பழம் இரண்டு சாப்பிடலாம்.
வியாழக்கிழமை :- வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு வெண் சணி சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு வெண் பொங்கல் ஒரு கப், மிளகு, கறி வேப்பிலை துவையல். பதினோறு மணிக்கு ஏதாவது ஒரு பழம். மதியம் ஒருமணிக்கு ஒரு கப் கோதுமை சாதம், காய்கறி சாம்பார். பேரிச்சம் பழம் இரண்டு அல்லது ஏதாவது ஒரு பழம். மாலை நாலரை மணிக்கு வேக வைத்த சுண்டல் ஒரு கப் மற்றும் சுக்கு காப்பி, இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், பப்பாளித்துண்டு ஒரு கப் மற்றும் ஒரு டம்ளர் பால் மட்டும்.
வெள்ளிக்கிழமை :- வழக்கம்போல காலையில் தண்ணீர் குடிக்கவேண்டும். காலை ஏழு மணிக்கு துளசிடீ, ஒன்பது மணிக்கு வெந்தயம் கலந்த இட்லி- நான்கு. மல்லி சட்னி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மதியம் ஒரு மணிக்கு பச்சை காய்கறிகள் இரண்டு கப், ஒரு கப் அவல் (தேங்காயு டன்), மாலை நாலரை மணிக்கு சுண்டல் ஒரு கப் அல்லது முளைகட்டின தானியம் ஒரு கப், ஒரு டம்ளர் கோதுமைப்பால், இரவு ஏழு மணிக்கு இரண்டு சப்பாத்தி, காய்கறி வேகவைத்தது ஒரு கப், ஏதாவது பழம்.
சனிக்கிழமை :- தண்ணீர். காலை ஏழு மணிக்கு இஞ்சி, நல்ல வெல்லம், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய நீர் ஒரு டம்ளர். ஒன்பதுமணிக்கு பழத்துண்டுகள் கலந் தவை இரண்டு கப், மதியம் ஒரு மணிக்கு ஒரு கப் சாதம் அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மோருடன் வெங்கா யம் ஊறவைத்தது ஒரு டம்ளர், அவரைக்காய், வாழைப் பொறியல் அல்லது கூட்டு, மாலை நான்கு மணிக்கு சாத்துக்குடி தேன் கலந்த சாறு ஒரு டம்ளர். இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், துளசி குடிநீர் ஒரு டம்ளர் அல்லது பட்டினி இருக்கலாம்.