சாலையோரம் சாதாரணமாக கிடைக்கும் இந்த செடியில் இத்தனை மருத்துவ குணங்களா ? கண் எரிச்சல் , உடல் வெப்பம் தீர்வு !

நெருஞ்சி செடியை பார்த்தாலே மக்கள் எல்லோரும் ஒரமாக செல்வார்கள் அதற்கு காரணம் அதன் முட்கள் அது கால்களில் குத்திவிடும்.ஆனால் அந்த செடியிலும் சில மருந்துவ குணங்கள் இருக்கிறது.அதை
 
சாலையோரம் சாதாரணமாக கிடைக்கும் இந்த செடியில் இத்தனை மருத்துவ குணங்களா ? கண் எரிச்சல் , உடல் வெப்பம் தீர்வு !

நெருஞ்சி செடியை பார்த்தாலே மக்கள் எல்லோரும் ஒரமாக செல்வார்கள் அதற்கு காரணம் அதன் முட்கள் அது கால்களில் குத்திவிடும்.ஆனால் அந்த செடியிலும் சில மருந்துவ குணங்கள் இருக்கிறது.அதை பற்றி இதில் நாம் பார்ப்போம்.

நெருஞ்சி செடி ஒரு அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதன் இலை, வேர், பூமற்றும் முள் என அனைத்தும் பயன்தரும். நெருஞ்சி செடி தரையில் படர்ந்து காணப்படும். அதன் பூ மஞ்சள் நிற மலர்களுடையது.

நெருஞ்சி செடியின் இலையை தண்ணீரில் சிறிது நேரம் வைத்தால், தண்ணீரின் அடர்த்தி மிகுந்து காணப்படும். எண்ணெய்போல் பிசுபிசுப்பு ஆகிவிடும்.இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறையை போக்கவும், பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது.

நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இந்த உப்புகள் சில சமயங்களில் தேங்கி இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுகளை நீக்கும் குணமுடையது.

நெருஞ்சில் செடி இரண்டை வேருடன் பிடிங்கி அதை ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராக காய்ச்சி குடி நீராக பயன்படுத்தலாம். 100 மி.லி. அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும். கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது

Tags