கருப்பர் கூட்டம் விவகாரத்தில் வாய்திறக்கமல் பதுங்கிய முதலாம்படை வீடு MLA ! தொகுதி முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத
 
கருப்பர் கூட்டம் விவகாரத்தில் வாய்திறக்கமல் பதுங்கிய முதலாம்படை வீடு MLA !  தொகுதி முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத கடவுள்களையும் இழிவாகவும் ஆ பா ச மாகவும் பேசி வீடியோ வெளியிட்டுவந்த கறுப்பர் கூட்டம் என்ற சேனலின் மீது பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகளும் புகாரளித்த நிலையில் .

அந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டார் . அவரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த நாத்திகன் சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் .

இதுவரை கருப்பர் கூட்டத்தை சேர்ந்த 5 பேர் கைதுசெய்ய பட்டுள்ள நிலையில் சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது

இந்நிலையில் தமிழ் கடவுள் முருகனை இழிவாக பேசியதற்காக பலரும் தங்கள் கண்டன குரல்களை கருப்பர் கூட்டத்திற்கு எதிராக எழுப்பியுள்ள நிலையில் அறுபடை வீடுகளில் முதலாம்படை வீடான திருப்பரங்குன்றம் தொகுதி திமுக MLA சரவணன் . கருப்பர் கூட்டத்திற்கு எதிராக சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை .

திகவினரால் நடத்தப்படும் கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் . அறுபடை வீடுகளில் 5 படை வீடுகளின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை .

கருப்பர் கூட்டம் விவகாரத்தில் வாய்திறக்கமல் பதுங்கிய முதலாம்படை வீடு MLA !  தொகுதி முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்

இதனால் திருப்பரங்குன்றம் பாஜக சாரபில் கருப்பர் கூட்டத்தின் அருகில் திமுக தலைவர் ஸ்டாலின் நிற்பது போன்றும் அந்த கருப்பர் கூட்டத்தை முருகர் மவதம் செய்வதுபோன்றும் சித்திரித்து அதில் எங்கே போனார் முதற்படை MLA? என்று போஸ்டர் அடித்து திருப்பரங்குன்றம் முழுவதும் ஒட்டியுள்ளனர் .

Tags