1 டீ-யின் விலை ரூ13,800!! அலை மோதும் கூட்டம்., டீ-யின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ரூபென்ஸ் என்ற உணவு விடுதியில் தான் உலகிலேயே மிக காஸ்ட்லியான டீ விற்பனை
 
1 டீ-யின் விலை ரூ13,800!! அலை மோதும் கூட்டம்., டீ-யின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ரூபென்ஸ் என்ற உணவு விடுதியில் தான் உலகிலேயே மிக காஸ்ட்லியான டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த டீ-யின் விலை 200 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 13 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும். இவ்வளவு விலை கொடுத்து இந்த டீ குடிப்பதால் என்ன பயன் என உங்களை யோசிக்க வைத்திருக்கும்.

ஆனால் அதை அவர்கள் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு தெரிந்த வரையில், அந்த டீ இலங்கை தேயிலை வகையை சேர்ந்தது. அபூர்வமான வெள்ளை நிற குடுவையில் வழங்கப்படுகிறது. அந்த வித்தியாசமான டீ கப்பின் விலை மட்டும் 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளதாம். மேலும் இந்திய நாட்டில் டீ தயார் செய்ய பயன்படுத்தப்படும் சாதாரண டீ தூளை கொண்டு அந்த டீ போடப்படுவதில்லை என்றும், அதில் ஒரு மேஜிக் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

1 டீ-யின் விலை ரூ13,800!! அலை மோதும் கூட்டம்., டீ-யின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இந்த டீயை லண்டன் வாசிகள் மட்டுமல்லாமல், பிற சுற்றுலாப் பயணிகளும் லண்டனுக்குச் சென்றால் அந்த டீயை அருந்தாமல் பெரும்பாலானோர் செல்ல மாட்டார்களாம். ஒருமுறை அந்த டீயை அருந்திவிட்டால் பணம் செலவானாலும் பரவாயில்லை அந்த டீயை குடித்து ஆக வேண்டும் என்ற மனநிலையை நாம் பெற்று விடுவோம். அந்த அளவிற்கு நம்மை மயக்கும் சுவையைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். இது போன்ற அதிசயங்களை கேட்கும்போது வாழ்வில் ஒரு முறையாவது லண்டனுக்கு சென்று அந்த டீயை குடித்து விடவேண்டும் போல் தான் இருக்கிறது.

Tags