தூக்கி எரியும் தோலில் இவ்வளவு சத்தா ? இது தெரிந்தால் இனி இப்படி பண்ணமாட்டீங்க!!

பழங்களின் சுவையையும், அதன் மருத்துவக் குணத்தையும் அறிந்து சாப்பிடும் நாம் பழங்களில் தோல்களில் இருக்கக்கூடிய சத்துக்களையும், மருத்துவ பயன்கள் குறித்து அறிவதில்லை. பழங்களை மட்டும் சாப்பிட்டு தோலை
 
தூக்கி எரியும் தோலில் இவ்வளவு சத்தா ? இது தெரிந்தால் இனி இப்படி பண்ணமாட்டீங்க!!

பழங்களின் சுவையையும், அதன் மருத்துவக் குணத்தையும் அறிந்து சாப்பிடும் நாம் பழங்களில் தோல்களில் இருக்கக்கூடிய சத்துக்களையும், மருத்துவ பயன்கள் குறித்து அறிவதில்லை. பழங்களை மட்டும் சாப்பிட்டு தோலை தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், பழங்களில்  இருப்பதை  விட தோலில் தான் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, ஆரஞ்சு பழ தோல், முக சுருக்கங்களை நீக்க பயன்படுகிறது. மாதுளைப் பழத்தின் தோல் முடி உதிர்வை தடுக்க  பயன்படுகிறது. இந்த வரிசையில்,

எலுமிச்சை பழங்களின் மருத்துவ பயன்கள் குறித்து இனி விரிவாக காணலாம். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி காணப்படுவதும் அதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்படுவதும்  நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் எலுமிச்சை பழத்தில் இருப்பதை விட அதன் தோலில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுகிறது. இதை  தவிர  வைட்டமின் ஏ, பீட்டா, கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் எலுமிச்சை பழத்தின் தோலில் காணப்படுகின்றன.

ஏதாவது ஒன்றை சுத்தப்படுத்துவதில் எலுமிச்ச பழத்தோலின்  பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இதன் தோல் மிகுந்த நறுமணம் உள்ளதாகவும், புத்துணர்ச்சி கொடுப்பதாகவும் இருக்கிறது. நம் அன்றாட வாழ்வில் காலை எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை பழ தோல்களை துண்டு துண்டாக சீவி  போட்டு நன்கு கொதிக்க வைத்துவிட்டு, பிறகு சிறிது தேன் சேர்த்து வெதுவெதுப்பாக பருகினால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்.

உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், சுறுசுறுப்பையும் தரும். செரிமான பிரச்சனைகள் உடனடியாக தீரும். தினமும் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Click  ஓணம் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ! வெளியான புகைப்படங்கள் உங்களுக்காக !

Tags