பார்லெஜி பிஸ்கெடின் சாதனை
பிராண்டட் பிஸ்கெட் மார்கெட்டில் பார்லே-ஜி பிராண்டின் மார்கெட் மதிப்பு 5 %. கொரோனா ஊரடங்கில் இந்த பிஸ்கெட் விற்பனை அதிகரித்ததால் இந்நிறுவனத்தின் மார்கெட் மதிப்பு உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின்
Jun 11, 2020, 13:23 IST

பிராண்டட் பிஸ்கெட் மார்கெட்டில் பார்லே-ஜி பிராண்டின் மார்கெட் மதிப்பு 5 %. கொரோனா ஊரடங்கில் இந்த பிஸ்கெட் விற்பனை அதிகரித்ததால் இந்நிறுவனத்தின் மார்கெட் மதிப்பு உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் குறைவான விலை பிஸ்கெட் பாக்கெட் ரூ.2. இதில் குளுக்கோஸ் சத்து இருப்பதால் ஊரடங்கு கால கட்டத்தில் இது சிறந்த மாற்று உணவாக பலருக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காலத்தில் மட்டும் நிறுவனத்தின் விற்பனை சந்தை 4.5% முதல் 5 % அளவு அதிகரித்துள்ளது. இரண்டுமாதங்களில் மார்கெட் அளவு அதிகரித்தது இது சாதனை அளவாகும் என்று ஷா கூறியுள்ளார். கடந்த காலங்களில் இதுபோன்ற வளர்ச்சியை எட்டியதில்லை என்றார்.