சோனு சூட்யிடம் 30,000 மதிப்புள்ள PS4 பிளேஸ்டேஷன் வாங்கித்தருமாறு கேட்ட 10 ஆம் வகுப்பு மாணவன் ! அதற்கு சோனு சூட் என்ன சொன்னார் தெரியுமா ? பதறிப்போன சிறுவன்

தமிழில் ஒஸ்தி , அருந்ததி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த கொரோன காலத்தில் பலருக்கும் உதவிவருகிறார் . ஆரம்பத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்து உதவிய சோனு சூட் , தொடர்ந்து பலருக்கும் உதவிவருகிறார்

சமீபத்தில் கூட வெளிநாட்டு சிக்கித்தவித்த 30,000 இந்திய மருத்துவ மாணவர்கள் , இந்தியா திரும்ப உதவிசெய்தார் . ஊரடங்கால் வேலை இழந்து காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு வேலை வாங்கி தருவது , உணவிற்கு கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது என தன்னிடம் சமூக வலைத்தளங்களில் உதவிகேற்கும் அனைவருக்கும் உதவிவரும் சோனு சூட்யிடம் ஒரு மாணவர் தனக்கு PS4 வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்

நிலேஷ் நிம்போரே என்ற 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஊரடங்கு காலத்தில் தனது பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் நண்பர்கள் PS4 விளையாடுவதாகவும் . தனக்கும் ஒரு PS4 வாங்கித்தருமாறும் கேட்டுள்ளார் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சோனு சூட் அந்த மாணவருக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார்

அதில் உன்னிடம் PS4 இல்லாமல் இருப்பது உனக்கு கிடைத்த வரப்பிரசாதம் , அதற்க்கு பதிலாக நான் உனக்கு புத்தகங்களை வாங்கி தருகிறேன் அவற்றை படி என்று பதிலளித்துள்ளார் . இதை பார்த்த சோனுவின் ரசிகர்கள் சோனுவை பாராட்டுவதுடன் , PS4 கேட்ட அந்த மாணவனை திட்டி தீர்த்தனர்


உடனே சற்று ஆடிப்போன அந்த சிறுவன் தான் போட்ட டீவீட்டை டிலீட் செய்ததுடன் . தான் இனி அறிவுப்பூர்வமான புத்தகங்களை படிப்பேன் என்று உறுதியளித்ததுடன் நீங்கள் எனக்கு நல்ல புத்தகங்களை அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார் . மேலும் நீங்கள் சிறந்த பணியை செய்கிறீர்கள் எனக்கும் மற்ற இந்தியர்களுக்கும் நீங்கள் ஒரு உந்துசக்தியாக இருக்கிறீர்கள் என்றும் அந்த மாணவன் கூறியுள்ளான்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்