கொரோனாவிற்கு புதிய தடுப்பூசியை இந்தியா தையரித்து உள்ளதாக தகவல் வருகின்றன வாருங்கள் அதை பற்றி பாப்போம்!!

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து
 
கொரோனாவிற்கு  புதிய தடுப்பூசியை இந்தியா தையரித்து உள்ளதாக தகவல் வருகின்றன வாருங்கள் அதை பற்றி பாப்போம்!!

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ஐதராபாத்தைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.


COVAXIN என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து செய்யப்பட்ட பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்த மாதம் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய பாரத் பயோடெக் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா, முதற்கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக இருப்பதாகவும், சோதனை முடிவுகள் விரிவான பாதுகாப்பு மற்றும் பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

Tags