உங்கள் முகம் பளபளப்பாக இருக்கவேண்டுமா ! இந்த எளிய வழியை பின்பற்றுங்கள்

நாம் உண்ணும் உணவில் சருமத்தை வளப்பதற்கும், மிருதுவாக பாதுகாப்பதற்கும் எந்த வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை.உங்கள் சருமம் பொலிவு இழந்ததற்கு மாசுக்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன
 
உங்கள் முகம் பளபளப்பாக இருக்கவேண்டுமா ! இந்த எளிய வழியை பின்பற்றுங்கள்

நாம் உண்ணும் உணவில் சருமத்தை வளப்பதற்கும், மிருதுவாக பாதுகாப்பதற்கும் எந்த வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை.உங்கள் சருமம் பொலிவு இழந்ததற்கு மாசுக்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போதும் நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் இன்னும் சரும பொழிவை கெடுக்கும்.

 

 

தினமும் சருமத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும்.நம் சருமத்தை பாதுகாக்க இயற்கை முறையில் பல வழிகள் உள்ளன.அதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.கற்றாழை வைத்து சரும பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

உங்கள் முகம் பளபளப்பாக இருக்கவேண்டுமா ! இந்த எளிய வழியை பின்பற்றுங்கள்

கற்றாழை என்பது ஒரு அழகுபடுத்தும் தாவரமாகும். இந்தியில் கற்றாழையை கிருத்குமாரி என்று அழைக்கப்படும்.கற்றாழை முக அழகு துறையில் அனைத்து பொருட்களிலும் மூலப்பொருளாக இருக்கிறது.இது உங்கள் கீரிம் ஃபேஸ் வாஷ் மற்றும் சோப்புகள் போன்ற அனைத்து பொருட்களிலும் உள்ளது.

சருமத்திற்கு கற்றாழை தரும் நன்மைகள்
கற்றாழை அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியது.ஆக்ஸிஜனேற்றம் மந்தமான தோல் மற்றும் சுருக்கமான தோல் போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது. கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளதால் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.தீ காயங்கள் மற்றும் முகப்பரு போன்றவற்றை கற்றாழை மூலம் குணப்படுத்தலாம்.

கற்றாழை ஜுஸ்
ஒரு கற்றாழை இலையை எடுத்து கொண்டு அதை துண்டு துண்டாக நறுக்கி அதன் மேல் இருக்கும் தோலை உரித்து விடுங்கள்.ஒரு பாத்திரத்தில் தெளிவான ஜெல்லை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.இப்போது மிக்சியில் அந்த ஜெல்லுடன் சில ஆப்பிள் மற்றும் அண்ணாச்சி ‌‌‌துண்டுகளை சேர்த்து அரைத்து வடிகட்டி ஜுஸை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை ஃப்ரெஷ்ஷாக உட்கொள்வது நல்லது.இந்த ஜுஸை தவறாமல் தொடர்ந்து குடித்து வந்தால் சரும பிரச்சனைகள் மற்றும் முக பொழிவுக்கு உதவுகிறது.

Tags